காலி பாஜக.. சபாஷ் ராகுல்.. தெலுங்கானாவில் ஒளிரும் "கை".. நிமிர்கிறது காங்கிரஸ்.. ஆனாலும் ஒரு சிக்கல்
சென்னை: தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் சொன்னதை போலவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.. ஆளும் பிஆர்எஸ்ஸை நொறுக்கி தள்ளிவிட்டு, அனைத்து எக்ஸிட் போல்களிலும், காங்கிரஸ் பிரதான இடத்தை பிடித்துள்ளது.
சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

எதிர்க்கட்சி: ஆளும் பி.ஆா்.எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என்ற மும்முனைப் போட்டி கடுமையாக நிலவுகிறது.. பிஆா்எஸ் கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ் போட்டியிடுகிறார்கள்.
இதில் சந்திரசேகர ராவ் கட்சி மொத்த தொகுதிகளிலுமே களமிறங்குகிறது.. அதிலும், கஜ்வெல் மற்றும் காமரெட்டி என்ற 2 தொகுதிகளில் போட்டியிடுகிறாா் கேசிஆர். அதேபோல, தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்பிக்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம்பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனர்.
பாஜக போட்டி: மொத்தம் 111 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா, 8 இடங்களில் போட்டியிட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, கோடங்கல் மற்றும் காமரெட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியோ, சிபிஎம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது.. அதேபோல, அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஹைதராபாத்தில் 9 தொகுதிகளில் களமிறங்கி உள்ளது.
இன்று காலையிலிருந்து ஓட்டுப்பதிவு துவங்கியது.. அந்தவகையில் தெலுங்கானாவில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய, தேர்தல் முடிவுகளை, தனியார் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
கணிப்புகள்: அந்தவகையில், (ஜன் கி பாத்) JAN KI BHAAT என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 56 இடங்களும், ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 48 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளது.

அதேபோல, PTS (பிடிஎஸ்) நடத்திய கருத்து கணிப்பில், காங்கிரஸ் 65 முதல் 68 இடங்களும், பிஆர்எஸ் 35 முதல் 40 இடங்களையும், பாஜக 7 முதல் 10 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 6 முதல் 7 இடங்களையும், மற்றவை 1 முதல் 2 இடங்களையும் கைப்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காங்கிரஸ்: அதுபோலவே, ARRAA என்ற செய்தி நிறுவனம் நடத்திய கணிப்பில், காங்கிரஸ் கட்சி 58 முதல் 67 இடங்களையும், பிஆர்எஸ் 41 முதல் 49 இடங்களையும், பாஜக 5 முதல் 7 இடங்களையும், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 7 முதல் 9 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிப்புகள் வெளிவந்துள்ளன.
ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், காங்கிரசுக்கு 58 முதல் 67 இடங்கள் வரையிலும், கேசிஆரின் பிஆர்எஸ்ஸுக்கு 41 முதல் 49 வரையிலும், பாஜகவுக்கு 5 முதல் 7 இடங்கள் வரையிலும், மற்றவை 7 முதல் 9 இடங்கள் வரையிலும் கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓவைசி: Republic-MATRIZE கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 58 முதல் 68 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பிஆர்எஸ் கட்சி இந்த தேர்தலில் 46 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 4 முதல் 9 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் மற்றவர்கள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 63 முதல் 79 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பிஆர்எஸ் கட்சி இந்த தேர்தலில் 31 முதல் 47 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 2 முதல் 4 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 முதல் 7 தொகுதிகளிலும் மற்றவர்கள் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிக்கு சரி: POLSTRAT என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பில், பிஆர்எஸ் 48 முதல் 58 இடங்களை பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 49 முதல் 56 இடங்களை பிடிக்கும் என்றும், மற்றவை 5 முதல் 10 இடங்களை பிடிக்கும் என்றும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆனால், சிஎன்என்-நியூஸ் 18 சார்பில் வெளியான கணிப்புகளில் மட்டும், தெலங்கானாவில் எந்த கட்சிகளுக்கு பெரும்பான்மை என்பது கிடைக்க்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பிஆர்எஸ் கட்சி 48 தொகுதிகளிலும், பாஜக 10 இடங்களிலும் ஓவைசி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொங்கு சட்டசபை: தெலங்கானாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக, ஓவைசியின் கட்சிகள் என யாருக்கும் அவ்வளவு இடங்கள் கிடைக்கவில்லை. இதன்மூலம் தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என சிஎன்என்-நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
பிஆர்எஸ் + காங்கிரஸ் கட்சிகள் சமமான இடங்களை பெறும் என்பதுபோல POLSTRAT நிறுவனமும், தொங்கு சட்டசபை அமையலாம் என்று நியூஸ் 18 நிறுவனமும் தெரிவித்துள்ளது, இன்றைய தினம் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
கேசிஆர் : ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலேயே, காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் வெளியாகி இருந்தன. இதை பார்த்து கேசிஆர் தரப்பு மிரண்டு போயிருந்தது.
அந்தவகையில், இப்போது வந்துள்ள பெரும்பாலான கணிப்புகளிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கருத்து கணிப்புகள், ஆளும் மாநில கட்சியை அதிர வைத்து வருகிறது. பாஜகவோ அதற்கு மேல் நொந்து போயுள்ளது.
அரசியல் நிபுணர்கள் கணித்து சொன்னதைபோல, கேசிஆர் ஆட்சியை இழப்பார் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் கணிப்புகளின் அடிப்படையிலேயே வெளியாகியிருக்கும் முடிவுகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதுதான், நிஜ நிலவரம் தெரியவரும்.
கணிப்புகள்: அதேசமயம், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய என்ற இருவித கருத்து கணிப்புகளிலுமே, ஆளும் கட்சிக்கும், பாஜகவுக்கும் சற்று அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. இத்தனைக்கும் பிரதமர் முதல் அமித்ஷா வரை மாறி மாறி பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.. பல்வேறு இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.. ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள்.. அத்துடன் காங்கிரஸையும் சேர்த்தே விமர்சித்தனர்..
எனினும், ஒரு இடத்தில்கூட, பாஜக 2வது இடத்தைகூட எட்டிப்பிடிக்கவில்லை என்பது தற்போது வெளியாகியிருக்கும் கணிப்புகளிலிருந்து தெரியவந்துள்ளது.. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிக தீவிரமாகவே ஈடுபட்டது.

சபாஷ் ராகுல்: ராகுல் காந்தியின் பாத யாத்திரை, இந்த யாத்திரையையொட்டி, கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது, போன்றவைகளின் தாக்கத்தையும் தெலுங்கானாவில் ஏற்பட்டதை உணரவும் முடிந்தது.. இதனால், காங்கிரஸின் செல்வாக்கும் தெலுங்கானாவில் சற்று அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.. அதனால்தான், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த மாஜிக்கள் முதல் எம்எல்ஏக்கள்வரை காங்கிரஸை தேடி வந்து இணைந்தார்கள். இதற்கெல்லாம் ஒரு பலன் தற்போது கிடைத்துவிட்டது போலவே இருக்கிறது.
இந்த தேர்தலின் வெற்றியே, விரைவில் நடக்க போகும் எம்பி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த நம்பிக்கையும் தந்து வருகிறது.
க்ளைமேக்ஸ்: அந்தவகையில், அரசியல் நிபுணர்கள் கணித்து சொன்னதைபோல, கேசிஆர் ஆட்சியை இழப்பதுடன், காங்கிரஸ் தெலுங்கானாவை கைப்பற்றும் என்றே தெரிகிறது.. ஒருவேளை தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அம்மாநில தலைவா் ரேவந்த் ரெட்டியே, முதல்வராக கூடும் என்கிறார்கள்.. அதனால், இப்போதே படுகுஷியில் காணப்படுகிறார் ரெட்டி... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications