தீபாவளிக்கு கூட வாழ்த்து சொல்லாத உங்கள் கைகளில் கோவில் நிர்வாகம் எதற்கு? தமிழிசை கேள்வி
சென்னை: தெலுங்கானாவில் இருந்தபடி பிரதமர் மோடி தமிழக அரசை விமர்சித்ததற்கு இங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பணிகளை ஏற்கனவே அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. அதன்படி சமீபத்தில் தெலுங்கானாவுக்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டர்.
பிரதமர் மோடி: அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானாவில் இருந்தபடி திமுகவை விமர்சித்துப் பேசினார். "தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டுச் சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகிறது" என்று அவர் சரமாரியாக விமர்சித்தார்.
மேலும், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை என்றும் அவர் பேசியிருந்தார். தெலுங்கானாவில் இருந்து கொண்டு அவர் தமிழ்நாடு அரசு குறித்துப் பேசியது பெரும் பேசுபொருள் ஆனது. தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து தமிழ்நாடு அரசைச் சாடி வருகிறார்கள். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன்: இதற்கிடையே இது தொடர்பாகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லும் நபர்களும் இன்று வள்ளலார் விழா கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாங்களும் வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லும் நிலைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதை நினைத்தால் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இல்லையென்றால் நீங்கள் இந்த விழாவை எப்போது கொண்டாடி உள்ளீர்கள்.. இன்னும் கொஞ்சக் காலத்தில் குடமுழுக்கு விழாக்களுக்குக் கூட முதல்வர் வந்தாலும் வரலாம். தேர்தல் நெருங்கும் காலத்தில் இது நடைபெறவும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இது நடந்தால் நான் மகிழ்ச்சியே அடைவேன்.
வாழ்த்து கூடச் சொல்வதில்லை: தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்கள்.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்கள்.. அப்படி இருக்கும் நீங்கள் எதற்காக இந்து கோயில் நிர்வாகத்தை வைத்திருக்க வேண்டும் என்பதே எனது கேள்வி" என்று அவர் தெரிவித்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications