Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்புமணி உங்களுக்கு அவமானமாக இல்லையா? தயாநிதி மாறன் எம்பி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக தலைவர் அன்புமணியை முதலில் அவங்க அப்பாவை பார்க்க சொல்லுங்கள்.. அப்பாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள்.. அவர் அப்பாவே என்னை கொலை பண்ண பார்க்கிறார் என்று சொல்கிறார்.. அந்த குற்றச்சாட்டு உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று மத்திய சென்னை தொகுதியின் எம்பியான திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களுக்கு கேள்விகளுக்கு தயாநிதி மாறன் எம்பபி அளித்த பதில்களை பார்ப்போம்.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மண்டலம் 5 பகுதி 14 சிவானந்தா சாலையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் 4.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உகந்த முறையில் அழகு படுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டில் பணியினை துவங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை தொகுதி எம்பி தயாநிதிமாறன், துறைமுகத்தில் இன்று மட்டும் பத்து கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களை இன்று அடிக்கல் நாட்டில் இருக்கிறோம்..

Tell Anbumani Ramadoss to see her father first central chennai mp Dayanidhi Maran attacks pmk

மினி தியேட்டர்

சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்குட்பட்ட வார்டு 54, 55, 56,57 ,59 மற்றும் 60 வார்டுகளில் மின்மாற்றிகளை அழகுப்படுத்தும் வகையில் வியூ கட்டர் 3 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னை சிவானந்தா சாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதியை 4 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.. மினி தியேட்டர், ஸ்கேட்டிங் பண்ணுவதற்கான பொதுமக்கள் அமர்ந்து இருக்கக்கூடிய வகையில் அழகான பகுதியாக மாற்ற இருக்கிறோம்.. இந்த பகுதிக்கு ஏற்கனவே யாரும் வராமல் இருந்தார்கள் இருட்டாக இருந்தது அதை வெளிச்சப்படுத்தி மக்கள் வரும் வழியில் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் என்றார்.

அதிமுக போராட்டம் ஏன்

எஸ் ஐ ஆர் பணி தொடர்பாக திமுகவை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தயாநிதி மாறன், மோடி தமிழ்நாட்டிற்கு வந்தார் அதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்றார்.


மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ

மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தயாநிதிமாறன், ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாக சொல்லுகிறார். வளர்ந்து வரும் மாநிலங்களில் இந்தியாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு. அதுவும் குறிப்பாக ஆக்ராவில் 20 லட்சம் பேர் கம்மியாக இருக்கிறார்கள். அங்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வஞ்சிக்கின்ற வகையில் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி வருகிறார் அப்பொழுதுதான் வஞ்சிக்க வேண்டும் என்று இந்த அறிவிப்பு வருகிறது. பொதுவாக பிரதமர் வருகிறார் என்றால் நல்ல அறிவிப்பு வரும் என்று சொல்வார்கள் பிரதமர் தமிழ்நாட்டின் வருகை நல்ல அறிவிப்பு வருவதில்லை தமிழ்நாட்டுக்கு விரோத அறிவிப்புதான் வருகிறது என்று கூறினார்.

நயினார் நாகேந்திரன் குறித்து தயாநிதி மாறன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்த பேசுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தயாநிதி மாறன், நயினார் நாகேந்திரன் பேச வேண்டும் என்று பேசி வருகிறார். பாஜக ஆளு என்ற மாநிலங்களில் குற்றச்சம்பவம் பற்றி பேச வேண்டியதுதானே.. டெல்லியில் தினமும் நடக்கின்ற குற்றச்சம்பவங்கள் உண்மையில் பயமாக இருக்கிறது.. அவ்வளவு குற்ற சம்பவம் நடக்கிறது.. பொதுவாக குறை சொல்ல வேண்டும், தேர்தல் நேரத்தில் தங்களை பெரிது படுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் சொல்லுகிறார் என்று தயாநிதி மாறன் விமர்சித்தார்.

ஸ்டாலின் உறுதி

மெட்ரோ திட்ட பணி குறித்து பேசிய தயாநிதி மாறன், மெட்ரோ திட்ட பணிகள் குறித்து அறிக்கை கொடுத்து இரண்டு ஆண்டுகளாக வைத்துவிட்டு பத்திரிகையில் செல்வதற்கு முன்பாக நிறைகுறைகள் குறித்து பேசி இருக்கலாம்.. தமிழ்நாட்டுக்கு விரோதமாக எதை செய்தாலும் மத்திய அரசு செய்தாலும் அதை எதிர்க்கின்ற ஒரே துணை உள்ள கட்சி திமுக.. மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் தான்.. தமிழ்நாட்டு மக்களுக்காக தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதி எடுத்து செயல்படுகிறோம்.. என்றார்

Tell Anbumani Ramadoss to see her father first central chennai mp Dayanidhi Maran attacks pmk

அன்புமணிக்கு அவமானமாக இல்லையா

தமிழக அரசு குறித்த பாமக தலைவர் அன்புமணியின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தயாநிதி மாறன், அன்புமணியை முதலில் அவங்க அப்பாவை பார்க்க சொல்லுங்கள், அப்பாவுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள், அவர் அப்பாவே என்னை கொலை பண்ண பார்க்கிறார் என்று சொல்கிறார், அந்த குற்றச்சாட்டு உங்களுக்கு அவமானமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+