சென்னை அருகே பயங்கரம்.. கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து பூசாரி, 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்
காஞ்சிபுரம்: வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பூஜாரி உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேங்கடமங்கலத்தில் உள்ளது, திருவேங்கடபெருமாள் கோயில். இங்குதான் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டு, புனரமைக்கப்பட்டது.

இன்று காலை, வழக்கம்போல பக்தர்கள் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். சனிக்கிழமை என்பதால் கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
கோயில் பூஜாரி வரதராஜன் சாமிக்கு தீபாராதனை காட்டி விட்டு வெளியே வந்தபோது திடீரென மண்டபத்தின் மேற்கூரை திடீரென, அப்படியே பக்தர்கள் நின்ற பகுதி மீது விழுந்தது. இதில், பூசாரி வரதராஜன், 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
பூஜாரி மேல்சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கதிர்வேலு, ரஞ்சனா, தன்ஷிகா ஆகிய மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்த பிறரு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, கோயிலில் நடைபெற்ற 2வது அசம்பாவித சம்பவம் இதுவாகும். கடந்த வருடம், துலாபாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு குழந்தை பலியான நிலையில், இப்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது அப்பகுதியினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications