கோவில் சொத்துகள் இந்து சமய அறநிலைய துறை சொத்துகள் இல்லை! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!
சென்னை : கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாகவோ; கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க கோரியும், கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை, சம்பந்தப்பட்ட கோவில்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் சொத்துக்களை கோவில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை எனச் சுட்டிக்காட்டியது.
மேலும், கோவில் சொத்துக்களை குத்தகைக்கு வழங்க ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அதுசம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது எனவும், அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கு அல்லது வாடகைக்கோ விட வேண்டும் என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications