மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் இருந்து காணும் வாய்ப்பு.. மெரினாவில் தற்காலிக நடைபாதை!
சென்னை: கடலை மாற்றுத்திறனாளிகளும் அருகில் பார்த்து ரசிக்க வேண்டும் என மெரினாவில் தற்காலிக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நாளை மறுநாள் திறந்து வைக்கப்படுகிறது.
கடலானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மணல் திட்டுகளை கடந்து கடல் அன்னையின் மடியில் விளையாட யாருக்குத்தான் ஆசை இருக்காது?
வாரத்திற்கு ஒரு நாள் அதிக செலவை கொடுக்காத நடுத்தர மக்களின் சொர்க்கம் இந்த கடற்கரைகள். இங்கு பட்டாணி சுண்டலை வாங்கிக் கொண்டு ரசிப்பதை சில விரும்புவர்.

கடற்கரை
கடலை போட்டுக் கொண்டே கடலை ரசிப்பது சிலரது வழக்கமாகும். இப்படி அனைவரும் ரசிக்கும் இந்த கடற்கரையை மாற்றுத்திறனாளிகளால் ரசிக்க முடியாத சூழல் எழுகிறது. நீண்ட தூர மணல் திட்டுகளில் நடந்து செல்ல வேண்டியிருப்பதால் இவர்களால் கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

பெரியவர்கள்
மாற்றுத்திறனாளிகள் சிறியவர்களாக இருப்பின் அவர்களை பெற்றோரே சுமந்து கொண்டு கடல் அன்னையின் அன்பை பெற வைக்கிறார்கள். ஆனால் சற்று வயதில் பெரிய குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் கடலை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் தற்காலிக நடைபாதை மெரினாவில் வைக்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி
இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளி சென்று கடலை அருகில் பார்த்து ரசிக்க முடியும். மெரினாவிற்கு மாற்றுத்திறனாளி வந்தவுடன் சென்னை மாநகராட்சியின் சார்பில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அவர்களை பிரத்யேகமாக அமைக்கப்பட்ட நடைபாதையில் அழைத்து செல்வர்.

பிரத்யேக நாற்காலி
அவர்களும் கடல் தண்ணீரின் அழகை பிரத்யேக நாற்காலியில் இருந்தபடி ரசிப்பர். இந்த ஆண்டும் அதே போல் தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாத காலம் இந்த நடைபாதை செயல்படும். இதை நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

மாநகர ஆணையர்
இந்த ஆண்டு நடைபாதையை சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைக்கிறார். ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு சென்று ரசிக்க மெரினாவில் நிரந்தர நடைபாதையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் முன் வைக்கிறார்கள். அது போல் எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகளிலும் நடைபாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications