இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.. “வீட்டுக்கே போறேன்.. பிளாட்பார்முக்கு வந்த தொழிலதிபர் ரத்தகண்ணீர்
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டெண்டர் ஊழல் காரணமாக தனது நிறுவனத்தையே மூடி தற்போது வீடு இன்றி வீதியில் தங்கிய தொழிலதிபர் நவமணி மீண்டும் வீட்டுக்கு செல்லப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் அவர் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், "2016 இல் அஇஅதிமுக அரசு காலத்தில் நடந்த முக மோசமான டெண்டர் ஊழலால் நூற்றுக்கும் மேல் கணினி மென்பொருள் பொறியாளர்கள் வேலை செய்த எங்கள் நிறுவனம் மூடப்பட்ட ஒரு சோகமான நிகழ்வை நீங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சி மூலம் அறிந்து இருப்பிர்கள். 2019 இல் உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டேன், கனம் நீதிபதி அவர்கள் என்னை இரண்டு பெட்டிஷன் பதிவு செய்ய சொன்னார். மிக மோசமான நிதி நிலவரம் காரணமாகவும், கொரோன காரணமாகவும் திரும்ப செல்ல இயலவில்லை. அது விபரம் கீழே கொடுத்துள்ளேன்.

எங்கள் மென்பொருளால் அகில இந்தியாவுக்கே பெருமை சேர்த்தோம், டிஜிட்டல் இந்தியா பாராட்டினார்கள். 2019இல் பிரதம மந்திரிக்கு இந்த ஊழல் குறித்து மனு அனுப்பினேன். அதுவும் டெல்லியில் இருந்து அண்ணாநகர் K4 காவல்நிலையம் வந்தது. என்னை கண்டுபுடிக்க முடியவில்லை என மனுவை திருப்பி அனுப்பினார்கள். 2021 இல் முதலமைச்சர் தனிப்பிரிவில் இது சம்பந்தமாக மனு கொடுத்தேன். பப்ளிக் சீக்ரெட பிரிவுக்கு அனுப்புகிறோம், இதற்கு நம்பர் தரமாட்டோம் என்றார்கள். 50துக்கும் மேற்பட்ட தடவைகள் அங்கு சென்றேன். ஆறு மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் SBCID காவல்துறை அதிகாரிகள் வீடு தேடி வந்தார்கள்.
உங்கள் முதலமைச்சர் மனு பற்றிய உண்மை தன்மையை விசாரிக்க வந்துள்ளோம் என்று விசாரணை சில நாட்கள் நடத்தினார்கள். நாங்கள் ரிப்போர்ட் அனுப்பிவிட்டோம், சில நாட்களில் உங்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று சொன்னார்கள். இன்றுவரை எந்த அழைப்பும் வரவில்லை. சென்ற வாரம் கூட முதல்வர் தனிப்பிரிவு தலைமை அதிகாரி திரு ராமப்ரதீபன் அவர்களை சந்தித்தேன். ஒரு நல்ல அதிகாரி, எப்பொழுதும் அமர சொல்லி ஒரு அரைமணி நேரமாவது பேசுவார். தன்னால் முடிந்த உதவிகளை செய்வார். அவரும் என்னுடைய மனு முதல்வருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை என சொல்லிவிட்டார்.
பலரும் சொன்னார்கள் நீங்கள் எப்பிடியாவது முதலமைச்சர் செல்லும் வழியில் மறித்து அவரிடம் நேரடியாக மனுவை கொடுங்கள் என்றார்கள். நானும் என் மகளும் முயற்சித்தோம். எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் எங்களை எளிதாக கண்டுபுடித்து தடைப்பண்ணி விடுகிறார்கள். அதிலும் படு தோல்வியே. யாரும் வேலை கொடுக்க தயங்குகிறார்கள். தொழில் செய்ய முதலீடு இல்லை. ஓட்டுநர் உரிமம் பெற பணம், கார் இல்லை. மீண்டும் உயர்நீதிமன்றம் சென்றால் அங்கும் பணம் எதிர்பார்க்கிறார்கள், நம்பமுடியாத உண்மை. அது ஒரு தனி கதை. The HC filing section is horrible. நீதிபதிகளுக்கு தெரியவேண்டிய உண்மை.
கடுமையான கடன் பிரச்னைகள், உடல்நலம் குன்றிய மனைவி மகளுக்கு மருத்துவம் பண்ண பணம் இல்லை, வீட்டு வாடகை கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்ட சூழ்நிலை, இன்னும் பல பிரச்சினைகள், இருந்தாலும் இன்று வரை சமாளித்து வந்தேன். அனால் இப்பொழுது வீதிக்கு தள்ளப்பட்டுள்ளேன். உண்மை அதுவே. நான் நன்கு வாழ்ந்த அதே சென்னை அண்ணாநகரில் இப்பொழுது டவர் பார்க் அருகில் நடைபாதையில் வாழுகிறேன்.
ஆனாலும் Fight for Justice அண்ட் Never Give Up என்ற முறையில் நான் இதை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் எனக்கு மூன்று விதத்தில் உதவலாம். ஒன்று, நான் இன்னும் நம் முதல்வர் மேல் நம்பிக்கையாக இருக்கிறேன். நீங்கள் அவருடைய கவனத்திற்கு கொண் டுவர உதவலாம். ரெண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாராவது ஒருவர் கவனத்திற்கு கொண்டு வரலாம். மூன்று. நீங்கள் நேரில் வந்து எனக்கு ஒரு book வாங்கி தரலாம். சமூகநீதி உங்கள் ஆதரவுக்கு நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இது ஊடகங்களில் செய்தியானதை தொடர்ந்து பலரும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். "உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் கோடானுகோடி நன்றிகள். சிலர் எனக்கு உணவு ஜூஸ் தண்ணீர் செய்தித்தாள்கள் வாங்கி வருவது நெஞ்சை தொடுகிறது. தயவுசெய்து எதுவும் வாங்கி வரவேண்டாம் நண்பர்களே. அருகில் கடைகள் உள்ளது. சமாளிக்கலாம்." என்று அவர் பதிவிட்டார். "K4 காவல் அதிகாரிகள் வந்து என்னை அங்கே இருக்க கூடாது என கிளம்ப சொன்னார்கள். என்னை மிரட்டவில்லை நலப்படியாகத்தான் சொன்னார்கள். Cm Cell வெள்ளிக்கிழமை வர சொன்னார்கள், நாளை செல்லுகிறேன். பார்க்கலாம்." எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பல மாதங்களாக வாடகை கொடுக்காத வீட்டில் தங்க மனம் இல்லை, வெளியே சொல்லமுடியாத பல துயரங்கள், பலஆண்டுகளாக அலைந்தும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை, சமூகநீதி வேண்டும் என்றால் சமூகத்திற்கு பிரச்சினைகள் தெரியவேண்டும் என்ற பல எண்ணங்களோடு தான் நான் நடைபாதைக்கு வந்தேன்.
— D. Navamani (@TechNavamani) October 7, 2023
இந்த நிலையில் தற்போது அவர் தற்போது மீண்டும் வீட்டுக்கு செல்வதாக அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "பல மாதங்களாக வாடகை கொடுக்காத வீட்டில் தங்க மனம் இல்லை, வெளியே சொல்லமுடியாத பல துயரங்கள், பலஆண்டுகளாக அலைந்தும் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு பதிலும் இல்லை, சமூகநீதி வேண்டும் என்றால் சமூகத்திற்கு பிரச்சினைகள் தெரியவேண்டும் என்ற பல எண்ணங்களோடு தான் நான் நடைபாதைக்கு வந்தேன்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி ஆதரவு அளிப்பது மிக பெரிய ஆறுதல். உங்கள் அனைவரின் அன்புக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நேரில் வந்து சந்தித்த நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள், இணையதள நண்பர்கள் காவல்துறை நண்பர்கள் அனைவரின் ஒரே வேண்டுகோள், வீட்டுக்கு செல்லுங்கள, அல்லது எங்களுடன் வாருங்கள் என்பதே. இப்பொழுது நம்முடைய சமூகத்திற்கும் என்னுடைய கஷ்டங்கள் ஊடகங்கள் மூலம் நன்கு தெரியவந்துள்ளது. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொண்டு நான் விடைபெற்று வீடு செல்லுகிறேன். நல்லதே நடக்கும் என நம்புவோம்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications