சென்னையில் பயணிக்கும் முறையையே மாற்ற போகிறது! ஓஎம்ஆர், ஈசிஆர் இடையே வரும் ராட்சச இரும்பு பாலம்
சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.

4 மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் வெளியேறும் வசதியுடன், படகு இயக்கத்தையும் அனுமதிக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும். ஏற்கனவே OMR பக்கத்திலிருந்து 1.4 கிமீ இணைப்புச் சாலையின் ஒரு பகுதி முழுமையடைந்துள்ளது. ஒரு கட்டமாக தொரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரின் OMR-ECR இணைப்பு இரும்பு பாலம் கட்டும் பணி இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை இணைப்பு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்றால் கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
இணைப்பு பணிகள்
கான்கிரீட் கட்டமைப்புகளுக்கு பதிலாக இரும்பு பாலங்கள் அமைக்க குடிமை அமைப்பு முடிவு செய்துள்ளது. மறுபுறம், சாலைகளை இணைக்க ரோட்டரி பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) முன்மொழிந்துள்ளது.
மேலும் எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வே லெவல் கிராசிங் 2ஏயில் ரூ.75 கோடியில் புதிய பாலம் கட்டப்படும். தண்டையார்பேட்டை, கடும்பாடி அம்மன் கோயில் தெருவை இணைக்கும் கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலமும், தமிழர் வீதியில் உள்ள மற்றொரு பாலமும் இடிக்கப்பட்டு முறையே ரூ.8.2 கோடியிலும், ரூ.4.38 கோடியிலும் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பிட்டு உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications