தென்காசியில் கிருஷ்ணசாமி கரை சேருவாரா? யாருக்கு முதலிடம்.. தந்தி டிவி பரபர எக்சிட் போல் சர்வே
தென்காசி: லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தென்காசி லோக்சபா தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் போல் முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவன்ங்களும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் யார் வெல்வார்கள், யார் தோற்பார்கள் என்று தனித்தனியாக கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் கைகள் தான் உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரிய ஷாக்கிங்காக அமையும்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தென்காசி லோக்சபா தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. தென்காசி தொகுதியில் திமுகவில் ராணி ஸ்ரீகுமாரும், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜான் பாண்டியனும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுகவிற்கே அதிகம் உள்ளது. திமுக வெற்றி பெற 37 சதவிகிதம் வாக்குகள் வாங்க வாய்ப்புள்ளது. புதிய தமிழகம் 31 சதவிகிதமும், ஜான் பாண்டியன் 22 சதவிகிதம் வாக்குகளும் பெற உள்ளதாக தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 15,16,183 ஆகும். ஆண் வாக்காளர்கள் 7,42,158 ஆகவும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,73,822 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினம் 203 ஆக உள்ளது. வாக்குப்பதிவு சதவிகிதம் 67.65 ஆகும்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications