நீட் தேர்வில் சாதித்த தென்காசி தாய், மகள்! சம்யுக்தாவுக்கு கோவை பிஎஸ்ஜி! அமுதவல்லிக்கு எந்த கல்லூரி?
சென்னை: மகளுடன் சேர்ந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி பெண் எம்பிபிஎஸ் படிக்க விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். அதே போல் அவரது மகள் சம்யுக்தா கிருபாளினிக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. படிப்பதற்கும் சாதிப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதும் விடாமுயற்சியும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதும் இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமுதவல்லி (49). நீட் தேர்வுக்கு தனது மகள் சம்யுக்தா படிக்கும் போது தானும் நீட் தேர்வுக்கு தயாராகினார். அத்துடன் தாயும் மகளும் சேர்ந்து நீட் தேர்வு எழுதினர்.

அதில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் வகையில் இருவரும் தேர்ச்சியும் பெற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற அமுதவல்லி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடத்தை தேர்வு செய்தார்.
32 ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு படித்த அமுதவல்லி, தனது மகளுடன் சேர்ந்து நீட் படித்து தேர்வான நிலையில் அவரது மகள் சம்யுக்தா கிருபாளினிக்கு அரசு கல்லூரியில் தனது அம்மாவுடன் சேர்ந்து படிக்க இடம் கிடைக்குமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சம்யுக்தாவுக்கு கோவை பிஎஸ்ஜி தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்யுக்தா கூறுகையில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் தேர்வில் உதவியது போல் எனது தாயார் அமுதவல்லிக்கு மருத்துவ படிப்பில் ஏற்படும் சந்தேகங்களையும் களைய உதவுவேன் என சம்யுக்தா தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 3,835 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களும், ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களும், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 195 இடங்களும் காலியாக இருந்தன.
அது போல் 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 3,302 இடங்களும் தனியார் பல்கலைக்கழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 529 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 20 பல் மருத்துவக் கல்லூரியில் 1797 இடங்களும் காலியாக இருந்தன.
தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 7513 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் 2004 மாணவர்கள் சேர்வதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications