"நெருக்கம்".. திடீர்னு வந்த சத்தம்.. டென்ஷன் ஆன "அபிராமி".. அதுக்குன்னு இப்படியா.. கொடுமையை பாருங்க
2 வயது குழந்தைக்கு சூடு வைத்த பெற்ற தாயை போலீசார் கைது செய்தன
சென்னை: இன்னொரு அபிராமியை பார்த்தீங்களா.. 2 வயது பிஞ்சும் என்றும் பாராமல் அந்த குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒரு எல்லையே இல்லாமல் ஊருவிட்டு, மாவட்டம் விட்டு, மாநிலம் விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு பாய்ந்து போய் கொண்டிருக்கிறது..!
எத்தனையோ சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு ஏராளமான பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன..

அபிராமிகள்
இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமலே அக்கிரமம் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்தும் அநியாயங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பிரதான இடத்தில் இருப்பது கள்ளக்காதலால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள்தான்.. பெற்றோர்களை கொல்வதும், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வதும் என, பெண்களே இத்தகைய கொடூரங்களில் இறங்கி வருகின்றனர்.. அதிலும், உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் அடங்குவதில்லை.

2வது கல்யாணம்
இதோ இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. சென்னை அடையாறு சாஸ்திரி நகர், 7வது லேன் பகுதியை சேர்ந்தவர் பானு.. 28 வயதாகிறது.. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு விமல்ராஜ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது... ஆனால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்துவந்துள்ளது.. கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கவும், கணவனை விட்டு, குழந்தையை தூக்கி கொண்டு பிரிந்துவந்து விட்டார் பானு.. கடந்த ஒரு வருடமாகவே, அதே பகுதியில் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

ஏஞ்சல் பாவம்
பிறகு, அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது... இதுகுறித்த உறுதியான தகவல் இல்லாவிட்டாலும், ஏஞ்சலுடன் ஜெகன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில், நேற்று முன்தினம் பானு, தன்னுடைய அம்மா கன்னியம்மாவுக்கு போன் செய்து, குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.. இதனால், கன்னியம்மாளும், பானு வீட்டுக்கு சென்று குழந்தையை பார்த்துள்ளார்.

தழும்புகள் - கொப்புளங்கள்
அப்போது குழந்தை ஏஞ்சல் முகத்தில் காயங்களும், சூடு வைத்த கொப்புளங்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்... அதனால், குழந்தையை உடனடியாக தூக்கிக்கொண்டு, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்களே அதிர்ந்துவிட்டனர்.. உடனே சாஸ்திரி நகர் போலீசுக்கு தகவல் தந்தனர்.. அதன்பேரில், போலீசாரும் விரைந்து சென்று, பானுவிடம் விசாரணை நடத்தினர்.

உடலுறவு
அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. பானுவுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை தொந்தரவாக இருந்து வந்துள்ளது ஜெகனுக்கு எரிச்சலை தந்துள்ளது. தாம்பத்திய உறவில் இடையூறாக இருப்பதால், பானுவுக்கும் அதே கடுப்பு ஏற்பட்டுள்ளது.. அதனால், பானு, ஜெகன் இருவருமே அந்த குழந்தை தொந்தரவு செய்யும்போதெல்லாம் கடுமையாக தாக்கி உள்ளனர்.. ஜெகன் சிகரெட்டால் அந்த 2 வயது பிஞ்சுக்கு சூடு வைத்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கொப்புளங்கள்
குழந்தையின் உடம்பில் பல இடங்களில் இந்த சிகரெட் தழும்புகள் உள்ளதாம்.. இந்த பானு குடிப்பாராம்.. ஜெகனுடன் சேர்ந்து குடிபோதையில் இவரும் நிறைய சூடு வைத்துள்ளார்.. கடந்த வியாழக்கிழமையன்று ஜெகன் + பானு இருவருக்கும் குழந்தை இடையூறாக இருந்துள்ளது.. அதனால், இருவரும் சேர்ந்து குழந்தையை ஆத்திரத்தில் பலமாக அடித்ததில் உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. என்பது தெரியவந்துள்ளது.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பானு, ஜெகன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. குழந்தைக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications