ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு - 98% பேர் பெயில் - வெளியான அதிர்ச்சி தகவல்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதென்னப்பா வாத்தியார்களுக்கு வந்த சோதனை.. வழக்கமாக ஆசிரியர்கள் தான் சரியாக எழுதாத மாணவர்களை பெயில் போடுவார்கள். ஆனால் ஆசிரியர்களே 98 சதவீதம் பேர் பெயில் ஆகி இருப்பதாக வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சரி அப்படி என்ன தான் தேர்வு , எதற்காக இப்படி பெயில் ஆனார்கள். இந்த தேர்வு அவ்வளவு கடினமானதா? என்ற கேள்வி உங்களுக்கு எழும்.

இதோ, என்னவென்று பார்த்துவிடுவோம். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்தியிருக்கிறது. இதில் இரண்டாம் தாளில் தேர்வு எழுதிய ஆசிரியர்களில் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசு உத்தரவு என்ன வென்றால், ஆசிரியர்களாக பணிபுரிய வேண்டும் என்றால், படிப்பை முடித்தால் மட்டும் போதாது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் கண்ணடிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு தான் ஒவ்வாரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

இரண்டு தாள்கள்

இரண்டு தாள்கள்

இதில் என்ன ஸ்பெசல் என்றால், 1 முதல் 5-ம் வகுப்பு உள்ள பள்ளிகளுக்கு தாள்-1 தேர்வும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் பணியாற்றுவதற்கு தாள்-2 தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழக்கமாக நடத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ந் தேதி வெளியானது. அதில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எழுதியவர்கள்

எழுதியவர்கள்

இந்தநிலையில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தகுதித்தேர்வு கணினி வழியில் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். ஆனால் 2 லட்சத்து 54 ஆயிரத்து 224 பேர் மட்டுமே தேர்வு எழுதி இருக்கிறார்கள்.இதில் சுமார் 1½ லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

98 சதவீதம் பெயில்

98 சதவீதம் பெயில்


தகுதித்தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 90 பெற்றால்தான் தகுதியாக தேர்வில் வெற்றி பெற்றதாக கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 2 சதவீதம் என்கிறார்கள். 98 சதவீதம் பேர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

2-ம் தாள் தேர்வு எழுதிய பட்டதாரிகளில் 2 ஆயிரத்துக்கும் குறைவாகவே தேர்ச்சி பெற்று இருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலையில் தேர்வு முடிவை இணைய தளத்தில் வெளியிட்டது. ஆசிரியர்கள் 98 சதவீதம் பேர் டெட் தேர்வில் தோல்வி அடைந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றாலும், ஆசிரியர் தேர்வாணையம் பணியிடங்களைஅறிவிக்கும் போது அதற்கும் தேர்வை நடத்துகிறது. அதில் வெற்றி பெறுபவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பலர் டெட் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வுக்கு தயாராக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறுகிறார்கள். எனினும் டெட் தேர்வில் 98 சதவீதம் பேர் தோல்வி அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+