குட்நியூஸ் வந்துருச்சு.. ஜவுளித்துறைக்கு தமிழக அரசு தந்த சர்ப்ரைஸ்.. குஷியில் துள்ளும் நெசவாளர்கள்
சென்னை: நெசவுத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கை தரும்வகையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் ஜவுளித்துறையே அடுத்த லெவலுக்கு முன்னேறி செல்லும் என்றும் நம்பப்படுகிறது.
பொதுவாக நம்முடைய நாட்டில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, வேலைவாய்ப்பை தருவது நெசவு தொழிலாகும். தமிழ்நாட்டில் நெசவு தொழிலுக்கும், ஜவுளி தொழிலுக்கும் நல்ல வாய்ப்பு எப்போதுமே இருந்து வருகிறது.

பிரதமர் மோடி: அதனால்தான், சமீபத்தில் பிரதமர் மோடி, 7 மாநிலங்களில் ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், நாட்டிலேயே முதல் ஜவுளிப்பூங்கா தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இப்படி ஒரு அறிவிப்பு வந்தவுடனேயே, தமிழக முதல்வர் ஸ்டாலின், மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்திருந்தார். 'தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திடம் 1,052 ஏக்கர் நிலம் இருக்கிறது. எனவே சிப்காட் நிறுவனத்தின் மூலம் இந்த ஜவுளிப்பூங்காவை செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தவும், உடனடியாக ஸ்டாலினின் கோரிக்கையும் ஏற்கப்பட்டது.
ஜவுளிப்பூங்கா: நாட்டின் முதல் மெகா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது, தமிழகத்துக்கே பெருமைத்தரக்கூடிய விஷயமாகும். இப்போது, ஜவுளித்துறையை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல, தமிழக அரசு தீவிரமாகி வருகிறது.. அந்தவகையில், மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசியை விரைவில் வெளியிட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கோவை நீலாம்பூரில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடந்தது. மத்திய, மாநில அரசின் ஜவுளித்துறையின் செயலாளர்கள், ஆணையர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம்: ஜவுளி துறையில் தொழில்நுட்ப ஜவுளி பிரிவு என்பது முக்கியமான சந்தையை பிடித்துவரும் நிலையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப ஜவுளி சந்தையின் சர்வதேச வாய்ப்புகள், தொழிலில் உள்ள சிக்கல்கள், அதை எவ்வாறு களையலாம் என்பது குறித்தும், இந்த கருத்தரங்கில் விரிவாகவே விவாதிக்கப்பட்டது.
கடந்த வருடம் முதல் கருத்தரங்கம் சென்னையில் நடந்த நிலையில், இப்போது 2வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.
புதிய சலுகைகள்: அப்போது அவர் பேசும்போது, ஜவுளித்துறைக்கு பல்வேறு நிதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநில ஜவுளித்துறை சார்பில் புதிய ஜவுளி பாலிசியை விரைவில் வெளியிட போகின்றோம். டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்க்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாநில அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு மில்லியன் எகனாமி என்ற இலக்கை அடைய இந்த கருத்தரங்கம் உதவும்" என்றார்.
ஜவுளித்துறையில் நிதி சலுகைகள் விரைவில் வெளியிட போவதாக அரசு அறிவித்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை நெசவு தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications