என்ன.. செந்தில் பாலாஜி தாடி பாலாஜிக்கு அண்ணணா? மூக்குப்பொடி சித்தர் சமாதில என்ன செய்கிறார் பாருங்க
சென்னை: மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் நலம்பெற திருவண்ணாமலையில் அமைந்து இருக்கும் மூக்குப்பொடி சித்தரின் ஜீவ சமாதியில் நடிகர் தாடி பாலாஜி பிரார்த்தித்து உள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீடுகள், தமிழ்நாடு தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், சகோதரர் வீடு, நண்பர்கள், நெருக்கமானவர்களின் இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. 17 மணி நேரம் சோதனைக்கு பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

காரில் அழைத்து சென்றபோது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. கடுமையான வலியால் அவர் காரிலேயே படுத்துக்கொண்டு அழுதார். இதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஈசிஜி ரிசல்டில் மாறுதல் இருப்பதாக தெரிவித்தனர்.
ரத்த நாள அடைப்பை கண்டறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், "மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது.
அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், விஜய் டிவி பிரபலமுமான தாடி பாலாஜி செந்தில் பாலாஜி நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டி திருவண்ணாமலையில் உள்ள, மூக்குப்பொடி சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பேசிய அவர், "இன்று காலை ஒரு விசயத்தை கேள்விப்பட்டேன். மனது கஷ்டமாக இருந்தது. மரியாதைக்குரிய அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். அவர் நெஞ்சு வலியில் துடிக்கிறார். அரசியலை தாண்டிய தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் சகோதர் போன்றவர்.
இந்த தகவலை கேட்டவுடன் எனக்கு மனது கடினமாகிவிட்டது. நல்லபடியாக அவர் குணமடைந்து வர வேண்டும். அதற்காக என்னுடைய குருநாதர் மூக்குப்பொடி சித்தரிடம் வேண்டுதல் நடத்தி இருக்கிறேன். என்னுடைய அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் குணமடைந்து வர வேண்டும். அவர் வருவார். அதற்காக எல்லோரும் வேண்டிக்கொள்ளுங்கள்." என பேசியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications