தம்பிதுரை அந்த பில்டப் தந்தாரே.. அப்போ நாளைக்கு தவெக பக்கம் தாவ போறாங்களா 36 அதிமுக எம்எல்ஏக்கள்?
சென்னை: அதிமுகவின் தற்போதைய சரிவு மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் துரை கருணா பல்வேறு அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமான போக்கினால் அதிமுக அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.. குறிப்பாக, கட்சிக்குள் எழுந்துள்ள பிளவு மற்றும் தவெகவின் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த முக்கிய தகவல்களை அவர் விவரித்துள்ளார்..
மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒரு சேனலுக்கு தந்த பேட்டியில் சொல்லும்போது, "சிவி சண்முகம் கடந்த வாரம் டெல்லி சென்றது ஏதோ ஒரு உள்நோக்கம் என்பதுபோல சிலர் பேசுகிறார்கள்.. சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்ததுக்கு முன்னாடி, அவர் ராஜ்யசபாவை ரிசைன் பண்ணனும். அதற்காக மட்டுமே டெல்லி சென்றார். ஒருவேளை டெல்லி விவகாரமாக போக வேண்டுமானால் வேலுமணிதான் தன்னுடன் அழைத்து சென்றிருப்பார்.

தவெகவுக்குள் மெஜாரிட்டியை பெருக்குவதற்கான பரபரப்புகள் நடந்ததை போலவே, அதிமுகவுக்குள்ளும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. தவெகவில் ஆட்சியில் பங்கு தருவதாக ஏற்கனவே சொன்னதால், நாம் அவர்களுடன் சென்று இணைந்து பணிபுரிவோம் என்று அதிமுகவில் எம்எல்ஏக்கள், அமைச்சர்களில் ஒரு சாரார் சொல்கிறார்கள்.
சிவி சண்முகம் போர்க்கொடி
ஆனால் இதற்கு மற்றொரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.. தவெகவில் போய் இணைந்தோம் என்றால், திரும்ப அதிமுக ஆட்சியை கொண்டு வருவதற்கு முடியாது.. அங்கே போய் அவங்களை எதிர்த்து எப்படி நாம் களமாட முடியும்? அதனால் வெளியிலேயே இருப்போம் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர்.
சிவி சண்முகம் எடுத்திருக்க முன்முயற்சியானது, மிகப்பெரிய பின்னடைவை சரிவை நோக்கி அதிமுக சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமினுடைய பிடிவாதத்தால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.. யாரை எதிரி என்று நாம் களமாட வேண்டுமோ அந்த திமுகவை எதிரி என்று கருதி களமாடவில்லை. அதற்கு பதிலாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்று சசிகலா, ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் போன்றோரை எதிரியாக நினைக்கிறார்கள்..
எடப்பாடி பழனிசாமி - அதிமுக தோல்வி
அவர்களை எதிரியாக நினைத்ததுடன், 210 தொகுதியில வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று நம்பி களமாடி இன்றைக்கு மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிட்டார்.. இனி இவருடைய தலைமையில் தொடர்வது சரியாக வராது என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில தான் இந்த 36 எம்எல்ஏக்களும் சிவி சண்முகம் வேலுமணி தலைமையில் இருக்காங்க பல முன்னாள் அமைச்சர்களும் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதுல தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவா, உள்ளிருந்து ஆதரவா, இல்ல 36 பேரும் போய் தவெகவில் இணைந்துவிடுவதா என்பது போல சோஷியல் மீடியாவில் ஓடிட்டு இருக்கு...
ஆனால் ஒரு மிகப்பெரிய பேரியக்கம் இன்னைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது, ஏழு முறை ஆட்சி கட்சியாக இருந்தது.. அதை இப்படி அதல பாதாளத்திறுகு எடப்பாடி கொண்டு சென்றுவிட்டாரே என்பதற்காகத்தான் இந்த விஷயம்..
தம்பிதுரை, செம்மலை நம்பிக்கை
தவெக மெஜாரிட்டியை பெற்றும்கூட, அதிமுக ஆட்சி அதிகாரத்துக்கு மீண்டும் வரும் என்று மூத்த அரசியல்வாதி தம்பிதுரை சொல்கிறார்.. கிங் அல்ல கிங்மேக்கராக வரப்போகிறார் என்று செம்மலை சொல்கிறார்..
இந்தஅரசியல் போக்கு இப்போதைய சூழல் என்பது அண்ணா திமுகாவை நோக்கி வருகிறது என்கிறார்.. இதெல்லாம் எந்த அடிப்படையில இவர்கள் பேசுகிறார்கள்? இவைகளெல்லாம் சேர்ந்து அதிமுகவினுடைய செயல்பாடுகளையே கேள்விக்குறி ஆக்கிடுச்சு
மே 13-க்குள் பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டும்...திங்கட்கிழமை அவை கூடி எல்லாரும் உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்வார்கள்.. ஒரு மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக்கி எல்லோரும் உறுதி மொழி ஏற்று அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது, சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார்..
நம்பிக்கை இல்லா தீர்மானம்
அப்போதே கூட நம்பிக்கை தீர்மானம் தவெக தாக்கல் செய்யலாம் அல்லது 12ம் தேதி சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை கூறும் தீர்மானம் கொண்டு வரலாம்.. போது திமுகவும், அதிமுகவும் எதிர் அணியில் உள்ளனர்.. இதில் திமுகவில் இதுவரையிலும் அணிவகுத்தவர்கள் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.. இந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் இவர்களுடைய நிலைப்பாடு என்ன?
திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னது போல, இந்த தவெக ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் 6 மாதம் எந்த இடையூறும் செய்ய மாட்டோம் ஆட்சி அமையட்டும் என்றார்.. அந்த நிலைப்பாட்டை அண்ணா திமுகாவும் எடுக்கும்.. எனவே நம்பிக்கைகோரும் தீர்மானத்தில் தவெக வெற்றி பெறும்.. ஒரு ஓராண்டு முடிந்ததற்கு பிறகு, இவர்களுடைய செயல்பாடுகளைப் பார்த்து இடதுசாரிகளும் மற்றவர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நாம் போக போகத்தான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications