''பாஜகவை காட்டி இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது''! அரசுக்கு சொல்றதை சொல்லிபுட்டேன்! -தமிமுன் அன்சாரி
சென்னை: பாஜகவை காரணம் காட்டி இனியும் இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது எனப் பேசி திமுக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியிருக்கிறார் தமிமுன் அன்சாரி.
ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், நோய்வாய்ப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் யாரும் விடுதலை தாமதமாகி சிறையில் உயிரிழந்தால், அதனால் ஏற்படும் கொந்தளிப்புகளுக்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அன்சாரி கூறியிருக்கிறார்.

இதற்கு முன் இப்படி ஆவேசம் காட்டாத தமிமுன் அன்சாரி முதல்முறையாக சற்று கடுமையான வார்த்தை பிரயோகம் செய்திருக்கிறார்.
மேலும், அந்த நிகழ்வில் தமிமுன் அன்சாரி பேசியதாவது,
''தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று தான் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கிறோம். அதற்காக ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுகிறோம். பாஜகவை காட்டி எங்களை இனியும் ஏமாற்ற முடியாது. நாங்கள் ஒன்றும் இலவச வாக்காளர்கள் அல்ல.''
''1995 க்கு பிறகு முஸ்லிம் சமூகம் அரசியல் அறிவில் தெளிவுப்பெற்றிருக்கிறது. 2K தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். முன்பு போல ஒரு கட்சிக்கு அல்லது ஒரே கூட்டணிக்கு ஒட்டுப் போடுவதில்லை. அந்தந்த தேர்தலுக்கு ஏற்ற சூழலை கவனத்தில் கொண்டே ஓட்டுப் போடும் முடிவை எடுக்கிறார்கள்.''

''1995 க்கு பிந்தைய அவர்களது வாக்களிப்பை உன்னிப்பாக கவனித்தால் இது புரியும். பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இம்முறை திமுக தலைமையிலான கூட்டணிக்கு சிறுபான்மையினர் வாக்களித்தார்கள். ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையில் முஸ்லிம் கைதிகள் புறக்கணிக்கப்படுவது அவர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.''
''திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீவிர பரப்புரை செய்தவர்களே இவ்விஷயத்தில் முதல்வரையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களின் முகநூலிலும், வாட்ஸ் அப் குழுமங்களில் கடும் விவாதங்கள் நடக்கிறது. முஸ்லிம் மஹல்லாக்களில் ( வசிப்பிடங்களில் ) இது பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை உளவுத்துறை அரசுக்கு உரிய வகையில் கொண்டு சேர்க்க வேண்டும்.''
''கட்சி சார்பற்ற பொதுமக்கள், ஜமாத்தார்கள், உலமாக்கள் ஆகியோர் இவ்விஷயத்தில் கோபமாக உள்ளனர். ஒரே கருத்தில் உள்ளனர்.இந்த அரசு நீடிக்க வேண்டும் என நாங்கள் மனதார விரும்புகிறோம். ஆனால் இவ்விஷயத்தில் நீதியை கோறுகிறோம். சிறைவாசிகள் விடுதலையில் இனியும் தாமதம் கூடாது.''
''161-வது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் போடுங்கள். இந்த உரிமை மாநில அரசுக்கு உள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவர்கள் யாரும் விடுதலை தாமதமாகி சிறையில் உயிரிழந்தால், அதனால் ஏற்படும் கொந்தளிப்புகளுக்கு தமிழக முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.''
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications