சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தமிழ்நாட்டில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர் மாநாடு!" தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு முதலீட்டாளர் மாநாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின்னர், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

8.30 மணி வரை தான் டைம்! திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கெடு விதித்த அமைச்சர் கேஎன்.நேரு! 8.30 மணி வரை தான் டைம்! திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கெடு விதித்த அமைச்சர் கேஎன்.நேரு!

மேலும், சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் 4 நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அமீரகம் சென்று இருந்தார்.

முதலீடுகள்

முதலீடுகள்

அப்போது உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வரின் அந்த பயணத்தில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. முதலீடுகளை ஈர்க்க விரைவில் முதல்வர் லண்டன் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 தொழில் சீர்திருத்தத் திட்டங்கள்

தொழில் சீர்திருத்தத் திட்டங்கள்


அதேபோல தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலிலும் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. மேலும், தொழில் சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜூலை 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னையில் வரும் 4ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்கள் உடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.

 கடந்த ஓராண்டு

கடந்த ஓராண்டு

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் தொழில்துறையில் மாபெரும் புரட்சி நடந்துள்ளது. ஓராண்டில் மட்டும் சுமார் 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளோம். இதன் மூலம் 94,975 கோடி ரூபாய் முதலீடு நமக்குக் கிடைத்துள்ளது. மேலும் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.. உலகளவில் திறன் மேம்பாட்டில் தமிழகம் மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.

Recommended Video

    Sri Lanka-வில் Adani Investment! Google Maps வெளியிட்ட Art Gallery | Aanees #BitsandBytes
    ஆர்வம்

    ஆர்வம்

    தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன" என்று அமைச்சர் தெரிவித்தார்.

    English summary
    Thangam Thennarasu explains about the investments made in Tamilnadu: (தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தங்கம் தென்னரசு) Thangam Thennarasu on jobs created in last one year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X