Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் தனியரசுக்கு 1 சீட் உறுதி! எந்த தொகுதி தெரியுமா? களைக்கட்டிய தேர்தல் திருவிழா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கு 1 சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை ஒட்டி மாநிலமெங்கும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை காணமுடிகிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் சீட் பங்கீடு விவகாரம் வரை ஓரளவு சுமூக நிலை நீடிக்கும் நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் இன்னும் சுமூக நிலை எட்டியபாடில்லை.

tamil nadu assembly elections 2026 congress

இந்நிலையில் திமுக தரப்பை பொறுத்தவரை, நாம் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் கூறியிருந் ததை போல் சின்னஞ் சிறிய அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், என பல்வேறு தரப்பையும் தனது கூட்டணிக்குள் ஐக்கியமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் 1 சீட்டை உறுதி செய்திருக்கிறதாம் திமுக தலைமை. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் நில்லுங்கள் என ஆஃபரும் தரப்பட்டுள்ளதாம். ஆனால் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தனியரசு இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தனியரசு. பரமத்திவேலூர், காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தல்களில் அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் வரை கூட இவரை அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் மூவர் கூட்டணி என்றழைக்கப்படும் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் இந்த் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வது என முடிவெடுத்திருந்தால் அதிமுகவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவைக்கு நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், தருமபுரி, கரூர் என கொங்கு மண்டல மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

திமுக பிளான் என்ன?

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. புதிய கட்சிகளுக்கு இடமளிக்கவும், முக்கிய கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளைச் சமாளிக்கவும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக தலைமை தனது கூட்டணிக் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முக்கியமான அரசியல் நகர்வை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியின் நலன் கருதி திமுக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய வரவுகளும், அதிகரித்துள்ள இட நெருக்கடியும்

திமுக இத்தகைய முடிவை எடுத்ததற்கு முக்கியக் காரணம், அண்மையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக கூட்டணியில் இணைந்ததுதான். கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்த நிலையில், அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. தேமுதிக இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கோரினாலும், திமுக அவர்களுக்கு ஒற்றை இலக்க அளவில் (6 முதல் 8 இடங்கள்) ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி கடந்த முறையை விடக் கூடுதல் இடங்களைக் கேட்கிறது. கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட அவர்கள், இந்த முறை குறைந்தபட்சம் 30 இடங்கள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திமுக காங்கிரஸுக்கு 28 இடங்களை கொடுக்க வாய்ப்புள்ளது. இதனுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் பிற சிறிய அமைப்புகளையும் சரிக்கட்ட வேண்டியிருப்பதால், திமுகவிற்கு தொகுதிப் பங்கீட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தியாகத்திற்குத் தயார் என அறிவித்த ஐயுஎம்எல்

இந்தச் சூழலில் காதர் மொய்தீன் பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் கட்சிகளை இணைத்துக் கொள்ள ஏதுவாக, ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்குமாறு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொகுதிகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைமை எங்களிடம் கூறியது" என்றார்.

கடந்த 2021 தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்ட ஐயுஎம்எல், இந்த முறை 2 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதேபோல் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகளிடமும் தலா ஒரு தொகுதியைக் குறைத்துக் கொள்ள திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தகட்ட நகர்வுகள்

திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு, பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பெரிய கட்சிகள் இந்த 'ஒரு தொகுதி தியாகம்' திட்டத்திற்குச் சம்மதிக்குமா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் இந்த நகர்வு எதிர்க்கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+