'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மு.க.ஸ்டாலின்'.. ராகுல் காந்தி தமிழில் ட்வீட்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த நிலையில் 'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்டாலின்' என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை வறுத்தெடுத்தார்.''மாநிலங்களின் குரலை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது. இது ஒருபோதும் நடக்காது என்று கூறினார்.

ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சு

ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சு

தமிழகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி, ''நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்'' என்று குற்றம் சாட்டினார்.

தேசிய அளவில் டிரெண்ட்

தேசிய அளவில் டிரெண்ட்

உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது'' என்றும் ராகுல் காந்தி அனல் பறக்க பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தேசிய அளவில் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர்

மு.க.ஸ்டாலின் நன்றி

மு.க.ஸ்டாலின் நன்றி

இதேபோல் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் புரட்சிகரமான பேச்சுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்திய புரட்சிகரமான பேச்சுக்கு நன்றி. சுயமரியாதை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீரகள்'' என்று கூறி இருந்தார்.

 ராகுல் காந்தி பதிலுக்கு நன்றி

ராகுல் காந்தி பதிலுக்கு நன்றி

இந்த ட்வீட்டுக்காக தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மு.க.ஸ்டாலின்' என்று தமிழில் கூறியுள்ளார். மேலும், தமிழர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள்தான். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மீதான நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+