Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தருமபுரியில் சவுமியா அன்புமணிக்கு அமோக ஆதரவு - அதிமுகவையே முந்தி செல்லும் பாமக.. தந்தி டிவி கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தருமபுரி லோக்சபா தேர்தலில் 2014-ல் விட்டதை 2024 ஆம் ஆண்டு பாமக பிடிக்குமா என்பது குறித்து தந்தி டிவி கருத்து கணிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுவதால் 4 முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் ஒரு தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Thanthi tv survey says what are the factors that work out for PMK in Dharmapuri

தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் இத்தனை நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பொதுவாக மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓயும். ஆனால் இந்த முறை கோடை வெயில் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை நடத்தப்பட்ட அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியானது.

ஆஹா.. தருமபுரி தொகுதியில் மாம்பழம் தடுமாறுதா? சவுமியா அன்புமணி நிலை என்ன? தந்தி டிவி போல் ரிசல்ட்!


இந்த கருத்துக் கணிப்புகளில் தருமபுரி லோக்சபா தொகுதியில் 33 முதல் 39 சதவீதம் வாக்குகளை திமுக பெறும் என்றும் பாமக 29 முதல் 35 சதவீத வாக்குகளையும் அதிமுக 23 முதல் 29 சதவீத வாக்குகளையும் பெறும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக ஒரு தொகுதியில் திமுக வென்றால், அதிமுக இரண்டாவது இடத்திற்கு செல்லும், அதிமுக வென்றால் திமுக இரண்டாவது இடத்திற்கு செல்லும்.

ஆனால் இந்த தொகுதியில் நிலைமை அப்படியே மாறியுள்ளது. அதாவது தருமபுரி திமுக வேட்பாளர் அ.மணியும், அதிமுக சார்பில் அசோகனும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியும் நாம் தமிழர் சார்பில் அபிநயாவும் போட்டியில் உள்ளனர். இவர்களில் திமுக வேட்பாளர் அ. மணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்த இடம் அசோகனுக்கு கிடைக்கும் என பார்த்தால் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு கிடைத்துள்ளது. இதற்கு காரணம் தொகுதி மக்களிடம் சவுமியாவின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது. சவுமியா மட்டுமில்லாமல் அவருடைய மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோரும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களும் அங்குள்ள மக்களிடம் ஜோவியலாக பழகுகிறார்கள். அவர்கள் வீட்டு பெண்ணாகவே மாறியுள்ளனர். பூக்கடை, பழக்கடை, காய்கறி கடைகளுக்கு செல்லும் போது அங்குள்ள பெண் வியாபாரிகளை கட்டி அணைத்து முத்தமிடுகிறார்கள். இவர்களுக்கு ஆரத்தி எடுத்தால் அந்த பொட்டை ஆரத்தி எடுப்போருக்கும் வைக்கிறார்கள்.

இப்படி அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் பழகுகிறார்கள். எல்லாவற்றுக்கு மேல் சவுமியா அன்புமணி அனைவராலும் அணுகக் கூடியவராக இருக்கிறார். தருமபுரி தொகுதியில் சவுமியா சார்ந்த சமூக வாக்குகள் அவருக்கு கிடைக்கும். என்ன இருந்தாலும் 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு வாக்குகளும் இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தருமபுரியில் இதே பாஜக கூட்டணியில்தான் பாமக போட்டியிட்டது. அங்கு அன்புமணி போட்டியிட்டு வென்றார். அவர் வென்றதற்கு காரணம் அங்கு 2009 ஆம் ஆண்டு திமுக சார்பில் வென்ற தாமரைச் செல்வன் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தமையால் 2014 இல் அன்புமணியை மக்கள் ஜெயிக்க வைத்தனர்.

இதனால் 2014 இல் விட்டதை 2024 இல் எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்றுதான் மகள்களை பிரச்சாரம் செய்ய அன்புமணி அனுமதித்தார். அவர்களும் அங்கேயே வீடு எடுத்துத் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த கருத்துக் கணிப்புகளின் படி பாமகவுக்கு வெற்றி இல்லாவிட்டாலும் அதிமுகவை முந்தியதே பெரும் சாதனை என சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் கருத்துக் கணிப்புகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். எனவே ஜூன் 4 ஆம் தேதி அன்றுதான் இந்த கணிப்புகள் பலிக்குமா, இல்லை பொய்க்குமா என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+