வேலை இல்லாதவர்கள் கவனத்திற்கு! வேலைவாய்ப்பு வெள்ளிக்கிழமையை தவற விடாதீர்! முழு விவரம்!
சென்னை: மாதத்தின் 2-வது மற்றும் 4-வதுவெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு
வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது என வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலை தேடுவோர் மற்றும் வேலை இல்லாதவர்கள் கவனத்திற்கு சில விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு;

வேலைவாய்ப்பு வெள்ளி
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளி - ஆக அனுசரிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று
வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் துறை
இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான
இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும்
இணைந்து 27.05.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்புமுகாமினை நடத்தப்பட உள்ளன.

என்ன தகுதி?
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 30- வயதிற்கு உட்பட்ட 8- ஆம் வகுப்பு, 10- ஆம்
வகுப்பு, ப்ளஸ் 2 ,ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும்
கலந்து கொள்ளலாம்.

வாய்ப்பை தவறவிடாதீர்
இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு
பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications