இணைந்த கைகள்.. பாரிவேந்தருக்கு போனைப் போட்ட ராமதாஸ்! 8 ஆண்டு கால பஞ்சாயத்து ஓவர்! அடுத்தது இதுதானா?
சென்னை: தற்போது தமிழக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக ஐஜேகே இடையே நீண்ட காலமாகவே அறிக்கை போர், நீதிமன்ற வழக்கு என பல பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது சமாதானம் ஆகி இருப்பதாக சொல்கின்றனர் நிர்வாகிகள். இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை? எங்கு தொடங்கியது? எப்படி முடிவடைந்தது? என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் தற்போது இருக்கும் தீவிர தேர்தல் அரசியல் தலைவர்களில் மூத்தவர் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான ராமதாசை சொல்லலாம். மருத்துவராக இருந்த அவர் வன்னியர் சங்கத்தை தொடங்கி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியாக அதனை உருவாக்கினார்.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றவர். அவரது கட்சியில் இருந்து மத்திய அமைச்சர்களாகவும் பலர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் இதுவரை ராமதாஸ் எந்த அரசு பதவியையும் வகித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மற்ற அரசியல் தலைவர்களில் இருந்து ராமதாஸ் எப்போதும் தனித்தே தெரிவார். காரணம் அவரது அறிக்கைகள். சுற்றுச்சூழல், பொருளாதாரம், மக்கள் பிரச்சனை என பல்வேறு தளங்களில் அவரது அறிக்கைகள் அனைத்து அரசியல்வாதிகளும் உன்னிப்பாக கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். குறிப்பாக அவரது அறிக்கைகள் மிகவும் துல்லியமாகவும் தரவுகளோடும் இருக்கும்.
மேகதாது பிரச்சனை தொடங்கி ரேஷன் கடை பிரச்சினை வரை அவரது அறிக்கை எப்போதும் ஆளும் கட்சிக்கு ஒரு உந்துகோலாகவே இருக்கும். அதே நேரத்தில் கடும் விமர்சனங்களை எதிர் அணிக்கு வைக்க எப்போதும் பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியது கிடையாது. புகைப்பிடித்தல் பிரச்சனை தொடங்கி திரைப்படங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என பிரச்சனை செய்து பல முன்னணி ஹீரோக்களுடன் வம்பு இழுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி விஜய் வரை பலருக்கும் பாமக குடைச்சலை கொடுத்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தின் மிகப் பிரபலமான கல்வி மற்றும் தொழில் நிறுவனமாக எஸ்ஆர்எம் குழுமம் இருக்கிறது. இதன் நிறுவனரான பாரிவேந்தர் பச்சமுத்து திமுக கூட்டணியில் இணைந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, எஸ்ஆர்எம் டிராவல்ஸ், தொலைக்காட்சி நிறுவனங்கள் எஸ்ஆர்எம் மருத்துவமனை, எஸ்ஆர்எம் ஹோட்டல் குழுமம் என பல தொழில்களில் கால் பதித்து வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் பச்சமுத்து. தொடர்ந்து அவர் அரசியல்வாதி அவதாரம் எடுத்து இந்திய ஜனநாயக கட்சியை உருவாக்கினார். தற்போது அந்த கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றாலும் ஆண்டுக்கு ஆண்டு மாநாடு அறிக்கைகள் என அவரும் ஒரு பிஸியான அரசியல்வாதியாகவே தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக சென்று கொண்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாமகவுக்கும் ஐஜேகேவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. ஆதாவது கடந்த 2016ஆம் ஆண்டு வேந்தர் மூவிஸ் மதன் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எஸ்ஆர்எம் கல்வி குழும தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதிலிருந்து இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது.
தொடர்ந்து அறிக்கைகளிலும் பேட்டிகளிலும் மாறி மாறி தாக்கி கொண்ட அதன் தலைவர்கள் நீதிமன்றம் வரை சென்றனர். உண்மையான பிரச்சினை மறந்து தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளும் நிலையும் வந்தது. இதனால் இது தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் ஒரு கட்சி இருக்கும் கூட்டணியில் இன்னொரு கட்சி இணையாமல் எதிர் தரப்பில் தஞ்சம் புகுந்து வந்தது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஐஜேகேவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவும் பாஜக கூட்டணியில் இணைந்தன. அப்போதிருந்து இரு தரப்புக்கும் இடையேயான மனக்கசப்புகள் மறைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஐஜேகேவுக்காக பாட்டாளி மக்கள் கட்சியினரும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் ஐஜேகே நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் ரவி பச்சமுத்து பாமக வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்துவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ராமதாஸ் அவரை தொடர்பு கொண்டு பேசினார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கமான நலம் விசாரிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தனிப்பட்ட ரீதியிலும் இருவரும் உரையாடியதாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இருவரும் சகஜமாக பழகி வருவதாக கூறுகின்றனர். மேலும் இந்த பேச்சு சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறுகின்றனர் பாமகவினரும் ஐஜேகே நிர்வாகிகளும்..
-
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ஹசினா சையத் செயல் முற்றிலும் முறையற்றது.. சசிகாந்த் செந்தில் விமர்சனம் -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!











Click it and Unblock the Notifications