அதிமுகவை முடக்க மேல்முறையீடு! சரமாரியாக விமர்சித்த எடப்பாடி! ஓபிஎஸ் மனு இன்று மீண்டும் விசாரணை
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போராட்டம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதியன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இதற்காக தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. மறுபுறம், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு முடிவுகளை எதிர்த்து ஏற்கெனவே ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இருப்பினும் இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தர்ப்பு தாக்கல் செய்தது. இந்த மனுவானது, ஏறத்தாழ ஒரு மாதக்கால இடைவெளிக்கு பின்னர் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது எடப்பாடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பதவி பசிக்காக ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும், தங்கள் தரப்பின் நியாயத்தையும் எடுத்து கூறினார். இதனையடுத்து இரண்டாவது நாள் விசாரணை இன்று மீண்டும் வருகிறது. இரண்டாவது நாளிலும், எடப்பாடி தரப்பு வலுவான வாதங்களை முன்வைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications