"நொறுங்கும்" கணக்கு.. ஜெர்க் ஆகும் பாஜக.. நெருக்கடி தரும் அந்த 3 புள்ளிகள்.. என்னாகும்!
பாஜகவின் பிளான்கள் தற்போது சிதறி வருகின்றன
சென்னை: முன்னாடி மாதிரி இல்லை.. நாளுக்கு நாள் பாஜகவின் திணறல் அதிகமாகி கொண்டிருக்கிறது.. அதிலும் இந்த முறை நடந்து முடிந்த, சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகு, பாஜகவின் கணக்குகள் தவிடுபொடியாகி கொண்டிருக்கின்றன.. அதிலும் இந்த 3 பேரை சமாளிக்க முடியாமல் ரொம்பவே டயர்ட் ஆகிவிட்டதாக தெரிகிறது.
வழக்கமாக பாஜகவை பொறுத்தவரை அதன் அரசியலே வித்தியாசமானதாக இருக்கும்.. பலம்பொருந்திய கட்சிகளுடன், நேரடியாக மோதுவதைவிட, தந்திரத்தோடு மோதுவதே அதன் சூட்சுமமாக இருந்து வருகிறது.. அதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறது.
குறிப்பாக, தேர்தலுக்கு முன்புவிட, தேர்தலுக்கு பின்பு, ரிசல்ட் வரும் காலங்களில் பாஜக ரொம்பவே பிஸியாகிவிடும்.. எதிர்முகாமில் இருந்து ஆட்களை இழுப்பது, பலத்தை பெருக்குவது, அதைவைத்து, ஆட்சியில் பங்கு கேட்பது என்ற அடுத்தடுத்த வியூகங்களை கையில் எடுக்கும்.. அப்படி பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது.

பாஜக
அந்த வகையில் மாநிலங்களை மட்டும் தன்கைக்குள் கொண்டு வர முடியவில்லை.. எப்படி எப்படியோ கணக்கு போட்டும், வெற்றிக்கான எல்லைக்கோட்டைகூட பாஜகவால் தொட முடியவில்லை.. அந்த மாநிலங்கள், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம்ஆகும்..

மம்தா
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, இந்த முறை தீதியை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று பாஜக தலைவர்கள் அந்த மாநிலத்துக்கு படையெடுத்து கொண்டே இருந்தனர்.. மம்தாவின் கட்சிக்காரர்களை தங்கள் பக்கம் இழுத்தும்கூட, ஒற்றை ஆளாக நின்று மொத்த பாஜகவின் பிளானையும் தவிடுபொடியாக்கிவிட்டார் மம்தா..

மம்தா
அதிலும், அம்மாநில தலைமைச்செயலாளரை திரும்ப பெறுவதாக மத்திய அரசு உத்தரவிட்டும், அவரை அனுப்ப முடியாது என மம்தா பதிலடி கொடுத்ததும், பிரதமர் மோடியை 30 நிமிஷம் காக்க வைத்ததும் டெல்லியையே நிலைகுலைய வைத்து விட்டன. இத்தனைக்கும் அங்கே எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலுவாகவில்லை.. மம்தா மட்டுமே பாஜகவுக்கு போதும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பதிலடி கணைகளை நேரடியாகவே தொடுத்து கொண்டிருக்கிறார்... மம்தாவே அடுத்த பிரதமர் என்ற ரேஞ்சுக்கு அவரது ஆதரவாளர்கள் இப்போதே குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிரடி
அதேபோலதான், கேரளாவும்.. அது ஒரு கம்யூனிஸ்ட் பூமி என்று தெரிந்தும், பலமுறை முட்டி மோதி கொண்டிருக்கிறது பாஜக.. ஆனால், சிவப்பு பூமி, காவி நிறமாகாது என்பதே கேரளாவின் ஆல் டைம் பதிலாக கிடைத்து வருகிறது.. அதிலும் இப்போது மத்திய பாஜக-விற்கு லட்சத்தீவு விவகாரத்தில் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார் பினராயி விஜயன்.. லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலை திரும்பப் பெற வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றி, பாஜகவை நிலைகுலைய வைத்துவிட்டார்.

தியாகராஜன்
நம்ம ஊரில் பார்த்தால், கேரளா, மேற்கு வங்கம் போல இல்லாமல், பாஜகவுக்கு பதில் சொல்ல அமைச்சர்களே போதும் என்றே முடிவெடுத்து விட்டார்கள் போதும்.. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நினைத்தாலே பாஜகவுக்கு கடந்த சில நாட்களாகவே கலக்கம் வந்துவிடுகிறது.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சி முறை தொடர்பாகவும் மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும் விலாவரியாக பிடிஆர் பேசுவார் என்று பாஜக மேலிடம் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காது.. புள்ளி விவரங்களுடன் பாயின்ட் பாயிண்ட்டாக பேசுவதை பார்த்து நிர்மலா சீதாராமனே கொஞ்சம் அதிர்ந்துபோனார்.

ஈஷா
இதனிடையே சும்மா இருக்காமல், எச்.ராஜா ஈஷா விவகாரத்தை பேற்றி பேசவும், அதை வைத்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கவும், வெறிப்பிடிச்ச நாய் குரைப்பதற்கெல்லாம் தன்னால் பதில்கூறமுடியாது என்று நறுக் பதிலை பிடிஆர் சொன்னது யாருமே எதிர்பாராத ஒன்று.. இதற்கு பிறகு வானதி சீனிவாசன் ஜிஎஸ்டி கவுன்சில் பற்றி பேச, எரிச்சலடைந்த பிடிஆர், வானதியை டிவிட்டர் பக்கத்தில் இருந்து பிளாக் செய்து நோஸ்கட் தந்தார். ஆளுக்கு ஒரு பக்கம் 3 மாநிலங்களில் இருந்து அழுத்தம் தரவும், இந்த பிரஷரை தாங்க முடியாமல் பாஜக திணறி வருகிறதாம்..












Click it and Unblock the Notifications