சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவின் பால் டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பு... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

லாரி டெண்டரில் பங்கேற்க தகுதியிழப்பு செய்யப்பட்ட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆவின் பால் டெண்டர்

ஆவின் பால் டெண்டர்

ஆவின் நிறுவனத்தின் பாலை எடுத்து செல்வதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 303 டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 288 லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. அந்த டெண்டரில் தொழில்நுட்ப தகுதிக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு அதில் சில நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் தேர்வான நிலையில், வணிக தகுதிக்கான விண்ணப்பங்களை திறப்பதில் தாமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆவின் நிர்வாகம் உத்தரவு

ஆவின் நிர்வாகம் உத்தரவு

இதுகுறித்து தொழில்நுட்ப தகுதியில் வெற்றிபெற்ற நவீதா டிரான்ஸ்போர்ட் நிறுவனம், ஆவின் நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்குவதற்காக தாமதப்படுத்தப்படுகிறதா என சந்தேகம் எழுப்பி பால்வளத்துறை செயலாளருக்கு ரகசிய கடிதம் அனுப்பியது. அதன்பின்னரும் அழைக்கப்படாத நிலையில் வணிக ரீதியிலான டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் நவீதா டிராஸ்போர்ட் அழைக்கப்படாமல், தகுதியிழப்பு செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு பதிலளிக்கணும்

தமிழக அரசு பதிலளிக்கணும்

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதியிழப்பு உத்தரவு மற்றும் டெண்டர் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு குறித்து தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

டெண்டர் இறுதி செய்யக்கூடாது

டெண்டர் இறுதி செய்யக்கூடாது

இதற்கு பல முறை விளக்கம் அளித்தும் தகுதியிழப்பை திரும்பபெறாததால், நவீதா டிரான்ஸ்போர்ட் பங்குதாரரான லக்‌ஷ்மி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தகுதியிழப்பு நடவடிக்கையை ரத்து செய்யவும், தங்கள் நிறுவனத்தை சேர்க்காமல் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

English summary
The Chennai High Court has ordered a ban on Avin milk tender activities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X