அடுத்த 5 நாளுக்கு... தென் மாவட்டங்களில் லேசான மழை இருக்காம்... வானிலை மையத்தின் நியூ நியூஸ்!
சென்னை: அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் வடகிழக்கு பருவமழை, இந்த மாதத்தின் நடுப்பகுதி வரை நீடித்தது. வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை கொட்டியது. பருவமழை காரணமாகவும், நிவர் உள்ளிட்ட புயல் காரணமாகவும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வருண பகவான் கருணையால் தமிழகத்தில் முக்கியமான அணைகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது:-கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துட்டனும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications