கிளாம்பாக்கத்தில் நடந்த.. சூப்பர் மாற்றம்! இனி பஸ் ஏறப்போகும் மக்களுக்கு சர்ப்ரைஸ்! அசத்தல் முடிவு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் வெளியிட்டு உள்ளார்.
அங்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்கா செயற்கை நீர் வீழ்ச்சி, அலங்கார விளக்குகள், பூங்கா , நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் இடம் என்று அசத்தலான வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

இது போக கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தை பேருந்து நிலையத்தோடு இணைக்கும் நடைபாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைபாலம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இதன் பணிகள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பாலம்: மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
பாலம் எப்படி இருக்கும்?: இந்த பாலம் சாதாரண நடைபாலமாக இருக்காது. மாறாக இது ராஜபாதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது
இந்த பாலத்தில் சிறிய சிறிய கியோஸ்க் வகை கடைகள் இருக்கும். மக்கள் அமர சீட்டிங் பே போன்ற இருக்காய் வசதிகள் இருக்கும். டிஜிட்டல் ஸ்கிரீனில் பேருந்துகள் செல்லும் பகுதிகள், நேரம், பிளாட்பார்ம் இருக்கும். அதேபோல் ரயில் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட், முன்பதிவு கவுண்டர்கள் கூட இருக்கும்.
முடிச்சூர்: இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முடிச்சூரில் கட்டி முடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளி முடிந்த பிறகு திறக்கப்படும் என்று ஆம்னி பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் முடிச்சூர் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications