இதுவரை SIR ல் கண்ட கேட்ட குழப்பங்கள்: நெட்டிசன் வெளியிட்ட முக்கியமான பதிவு
சென்னை: அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களில் ஒருவரை யாரெனும் ஒரு வழித்தோன்றல் (மகன் மகள்) தன் படிவத்தில் பயன்படுத்திவிட்டால் இன்னொருவரால் பயன்படுத்த முடியவில்லை. எடுத்துக்காட்டுக்கு என் அப்பா பெயர் 2005ல் பட்டியலில் உள்ளது. நான் இணையவழிப் படிவம் போடும்போது அவரின் தகவலைப் பயன்படுத்தினேன். அது ஆதார் சரிபார்ப்பில் மறுக்கப்பட்டுவிட்டது என்று நெட்டிசன் ஒருவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று 27.10.2025 அன்றைய தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மற்றும் வாக்காளரின் உறவினர் விவரங்களை நிரப்ப வேண்டும்.
இந்த பணி வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த படிவம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒரே மாதத்தில் முடிப்பது சாத்தியம் இல்லை என்கிற நிலை உள்ளது. பலர் வெளியூரில் வேலை செய்யும் நிலையில், அவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் சேர முடியாத நிலை ஏற்படும்.. அல்லது ஏற்கனவே உள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ளது. இதுபற்றி பாலாஜி மூர்த்தி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல்களை பார்ப்போம். இதுவரை SIRல் கண்ட கேட்ட குழப்பங்கள்:
1. ஆதாரில் இருக்கும் பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இணையத்தில் படிவம் நிரப்பமுடியும். தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும்பான்மையாக surname இல்லாததால் இது "-" எனத் தானாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்துப் போவதே இல்லை. இதனால் இணையவழிப் படிவம் கொடுப்பது மிகக் குழப்பமாக இருக்கிறது. Aadhaar authentication நீக்கினால் மட்டுமே இது பயன்படும்
2. அப்பா அம்மா தாத்தா பாட்டி ஏன் நம் பெயரும் கூட 2002, 2005ல் இருக்கும் பட்டியலில் தேடி எடுப்பது எளிதாக இல்லை. பலருக்கும் அப்போதைய அட்டை எண்ணும், இப்போதைய அட்டை எண்ணும் ஒத்துப் போகவில்லை, இல்லையெனில் அப்போதைய பட்டியலில் அந்த எண்ணே இல்லை.
3. அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களில் ஒருவரை யாரெனும் ஒரு வழித்தோன்றல் (மகன் மகள்) தன் படிவத்தில் பயன்படுத்திவிட்டால் இன்னொருவரால் பயன்படுத்த முடியவில்லை. எடுத்துக்காட்டுக்கு என் அப்பா பெயர் 2005ல் பட்டியலில் உள்ளது. நான் இணையவழிப் படிவம் போடும்போது அவரின் தகவலைப் பயன்படுத்தினேன். அது ஆதார் சரிபார்ப்பில் மறுக்கப்பட்டுவிட்டது.
சரி இன்னொரு முறை முயலலாம் எனப் பார்த்தால், "Selected Previous SIR Record is already map to someother elector,Please contact your BLO". எனில் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால், ஒருவர் அம்மா, ஒருவர் அப்பா தகவலைப் பயன்படுத்தலாம். மற்ற இருவர் தாத்தா பாட்டி பெயர்கள் இருந்தால்தான் பயன்படுத்தலாம். இல்லையென்றால் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்
4. ஆணையம் கொடுத்திருக்கும் உதவி எண்களைத் தொடர்புகொண்டால் தானியங்கி உதவி மட்டுமே சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறது
5. வாட்ஸாப் எண்ணைத் தொடர்பு கொண்டால், விடை இல்லை

6. Request a Call with BLO எனும் முறையில் நேற்று பதிந்தேன். இன்னும் சில நிமிடங்களில் கூப்பிடுவார் என்று வந்தது. இப்போது வரை கூப்பிடவேயில்லை. அவரும் என்னதான் செய்வார் பாவம்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் பாலாஜி மூர்த்தி தனது அடுத்த பதிவில், "அப்பா அம்மா தாத்தா பாட்டியின் பெயர், 2002, 2005 வாக்காளர்ப் பட்டியலில் இருந்தால், அதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது, இன்னொருவர் பயன்படுத்தினால் தடுக்கிறது எனச் சொல்லியிருந்தேன். தேர்தல் ஆணையத்தின் காதுக்கு அது சென்றுவிட்டது போலும். இப்போது ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்த இயல்கிறது. தட்டுங்கள் திறக்கப்படும். வலுவாக." இவ்வாறு கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications