விபச்சாரத்தில் காஸ்ட்லி சகோதரிகள்.. உல்லாசத்தில் பெண்களை ஏமாற்றி, மதம் மாற்றி: யார் அந்த செல்வந்தர்
சென்னை: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேலை தேடும் ஏழை இளம்பெண்களை குறிவைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அதிலும் இந்த பாலியல் தொழிலில் 2 சகோதரிகள் ஈடுபட்டது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது.. இரு சகோதரிகளும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களை ஏமாற்றி இந்த சட்டவிரோத செயலில் ஈடுபடுத்தியது அதையும்விட அதிர்ச்சியை தந்து வருகிறது.. என்ன நடந்தது?
அப்பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய கிராம பகுதியில் வசித்து வந்தவர்கள் 2 சகோதரிகள்.. அம்ரின், அப்ரின் என்பது அவர்களது பெயர்.. இவர்கள் 2 பேரும் வேலை தேடி அலையும் இளம் பெண்களை மட்டுமே குறி வைத்து, அவர்களை தந்திரமாக அணுகியுள்ளனர்..

10000 ரூபாய் சம்பளம்
அவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு மற்றும் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் தருவதாக ஆசை வார்த்தைகளை சொல்லி தங்களது வலைக்குள் வீழ்த்தியுள்ளனர்.. வறுமையில் வாடிய இளம்பெண்கள் இவர்களின் பேச்சை நம்பி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.. ஆனால், வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தொடங்கியுள்ளனர்.. அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றமும் செய்துள்ளார்கள்..
அப்படித்தான் 21 மற்றும் 32 வயதுடைய 2 பெண்கள் வேலை தேடி சென்றுள்ளனர்.. அவர்களும் இதுபோன்ற நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாக பாக் செவானியா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.. அந்தப் புகாரின் அடிப்படையில் அம்ரின், அப்ரின் மற்றும் அவர்களுக்கு உதவியாளராக செயல்பட்ட சந்தன் யாதவ் ஆகிய மூவரைப் போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர்..
உல்லாசம் - விபச்சாரம் - பப்
இந்த வழக்கில் தொடர்புடைய பிலால், சானு மற்றும் யாசிர் ஆகிய 3 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.. அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. இளம்பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கிடைத்த சட்டவிரோத பணத்தின் மூலம் இந்த சகோதரிகள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்ததை சுட்டிக்காட்டிய காவல்துறை, அவர்களின் சொகுசு வாழ்க்கையை பார்த்து அக்கம் பக்கத்தினர் வியப்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்..
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்துள்ளனர்.. அதில், ஏழ்மை நிலையில் இருந்த எங்களுக்கு வேலை தருவதாக சொன்னார்கள்.. மெல்ல பார்ட்டிகள், பப்கள் மற்றும் லாஞ்சுகளுக்கு அழைத்து சென்றார்கள்..
அங்கு வரும் செல்வந்தர்களுடன் ஒன்றாக இருக்க வற்புறுத்தினார்கள்.. விபச்சாரத்துக்கு மறுத்தால், எங்களுக்கு மது மற்றும் எம்டி எனப்படும் போதைப் பொருட்களை கட்டாயப்படுத்தி தருவார்கள்.. சுயநினைவற்ற நிலையில் இருந்தபோது கொடூரமான முறையில் வன்கொடுமை செய்துவிடுவார்கள் என்று சொல்லி அதிர வைக்கிறார்கள்..
சகோதரிகள் கைது
இதையடுத்து மேற்கண்ட கும்பல் குறித்து போலீசார் திரட்டிய தகவல்களில் மேலும் பல கோரிக்கைகள் வெளிவந்துள்ளன.. அதாவது சத்தீஸ்கரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2025 டிசம்பரில் வேலைக்காக அகமதாபாத் அழைத்து செல்லப்பட்டபோது, அங்கு அம்ரினின் உறவினர் யாசிர் என்பவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்..
இன்னொரு பெண் சந்தன் யாதவ் என்பவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.. இந்த கொடுமைகளை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக அம்ரின் மற்றும் அப்ரின் சகோதரிகள் மிரட்டினார்களாம்..
தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
பாதிக்கப்பட்ட பெண்கள் குஜராத் மற்றும் மும்பை போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதால், இதன் பின்னணியில் மிகப் பெரிய மனிதக் கடத்தல் கும்பல் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.. இந்த நெட்வொர்க் எங்கு வரை பரவியுள்ளது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications