தாம்பரத்தில் அன்று கண்ணீர் விட்டு அழுத பெண்.. இன்று தேடி வந்த தங்கம்.. இது தான் ரியல் சர்ப்ரைஸ்
சென்னை: சென்னை தாம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தின் போது, வீடு புகுந்து கொள்ளையர்கள் , நகைகளை திருடி சென்று விட்டார்கள். அப்போது நகைகளை பறி கொடுத்த தம்பதிக்கு, திருடு போன நகைகளை மீட்டு கொடுக்கப்பட்டது. இதற்காக தாம்பரம் மாநகர காவல் துறைக்கு அந்த தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டாறு போல் வெள்ளம் ஓடியது. இதனால் பலர் மழை வெள்ளத்திற்கு பயந்து சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அப்படித்தான் தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். அப்படித்தான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருந்தது.

சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை திருடியிருந்தார்கள். இதனிடையே ஏற்கனவே வெள்ளத்தால் மொத்த பொருட்களும் வீணாய் போன நிலையில், நகைகளும் திருடப்பட்டது தாம்பரத்தைச் சேர்ந்த ஒருரு தம்பதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த பெண் நகைகள் திருடப்பட்ட போது கதறி அழுது மீடியாக்களிடம் பேசினார்.
திருடு போன நகைகளை மீட்டு கொடுத்த தாம்பரம் மாநகர காவல் துறையினருக்கு👮🚔 நன்றி தெரிவித்த தம்பதியினர்... pic.twitter.com/uDHEZtEHhX
— TAMBARAM CITY POLICE (@COPTBM) January 6, 2024
அப்போது அந்த பெண் பேசுகையில், கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருந்த நகை , தயவு செய்து யார் எடுத்திருந்தாலும் கொடுத்திருங்க பிளீஸ் என்று கண்ணீர் விட்டு அழுதார். மழையால் சொந்த ஊருக்கு போனதாகவும், வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் அந்த பெண் கூறினார். பசி பட்டினியுடன் சாப்பிடாமல் இருந்து ஒரு ஒரு நகையாக சேர்த்தோம் என்றும் கண்ணீர் விட்டு கெஞ்சினார். இதை பார்த்து பலரும் அந்த தம்பதியின் நிலையை நினைத்து வருத்தப்பட்டனர்.
தாம்பரம முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தது. எனினும் கதறி அழுத தம்பதியின் வீட்டில் கொள்ளையடித்த திருடனை கண்டுபிடித்த தாம்பரம் போலீசார், அந்த பெண்ணுக்கு நகைகளை மீட்டுக் கொடுத்தனர்.
இதையடுத்து திருடு போன நகைகளை மீட்டு கொடுத்த தாம்பரம் மாநகர காவல் துறையினருக்கு அந்த தம்பதி நன்றி தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஊடகத்திடம் பேசிய அந்த பெண், "நாங்கள் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, மீண்டும் கடந்த 9ம் தேதி தான் வந்தோம்.
வந்து பார்த்த போது, எங்கள் ஐந்துபேரின் வீடுகளை உடைத்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். நகைகளையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். தாம்பரம் போலீசார் கஷ்டப்பட்டு திருடர்களை கண்டுபிடித்து நகைகளை மீட்டு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. எங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த பெண் கூறினார்.












Click it and Unblock the Notifications