ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரன் கோரிக்கை.. டாக்டர் தந்த ரிப்போர்ட்.. நீதிமன்றம் நிராகரிப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரன் உடல் நிலை திடீரென மோசமடைந்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.அவரது சிகிச்சை அறிக்கையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதுகுறித்து மருத்துவர்கள் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.. இதையடுத்து நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் நாகேந்திரன், அவரின் மகன் அசுவத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாகேந்திரன் உடல் நிலை திடீரென மோசமடைந்து வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். கல்லீரல் பிரச்சனை காரணமாக, சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த விசாரணையின் போது, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இந்த அறிக்கை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதி, நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனக்கூறி நாகேந்திரனின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications