வாரிசு நடிகரால் வந்த வினை.. ஹீரோவுக்கு மெனக்கெடல் தேவை.. சண்முக பாண்டியன், சிபி, கவுதம் மேலே வரணும்
சென்னை: வாரிசு நடிகர்கள் அனைவருமே தமிழ் திரைப்பட உலகில் சோபிக்க முடிவதில்லை.. எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் உச்சத்தில் உள்ளார்.. சிவகுமார் சாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளனர். ஆனால் மற்ற நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள் புகழ்பெற முடிவதில்லை என்று இயக்குனர் பாரதி மோகன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.. அத்துடன், இயக்குனர் இமயம் பாரதிராஜா பற்றியும் அந்த பேட்டியில் விரிவாக பேசியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாரதி மோகன், "பாக்யராஜ் மற்றும் பாண்டியராஜன் போன்ற சிறந்த இயக்குனர்களின் மகன்கள் ஏன் சினிமாவில் பெரிய அளவில் சோபிக்கவில்லை..

இயக்குனர் பாரதிராஜாவை எடுத்து கொண்டால், சிறந்த திரைக்கதை ஆசிரியர், மிகப்பெரிய அளவில் கதாநாயகிகளை உருவாக்கியவர். ஆனால், பாரதிராஜாவால் கூட தனது மகன் மனோஜை ஒரு பெரிய ஹீரோவாக உருவாக்க முடியவில்லை.. வாரிசு நடிகர்களை எப்படி "பிராட் அப்" செய்ய வேண்டும் என்பதில் சில சமயம் தவறு நடந்துவருகிறது..
சிம்பு ஒரு பிறவி கலைஞர்
டி.ராஜேந்தர் சாரை பொறுத்தவரையில், சிம்புவை சரியாகவே வளர்த்தார். சிம்பு ஒரு பிறவி கலைஞர்.. ஆனால், தன்னையே வடிவமைத்து சிவகார்த்திகேயனைவிட சீனியராக இருந்தாலும் தன்னை வடிவமைத்து கொள்வதில் என்ன சிரத்தை மேற்கொண்டுள்ளார்? என்பதையும் கவனிக்க வேண்டும்.
விஜய் மற்றும் அஜித்திற்கு இணையான சீனியர் நடிகர் சிம்பு.. அவர் ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக வந்திருக்க வேண்டியவர்.. டான்ஸ், நடிப்பு, பாட்டு, டெக்னிக்கல் என "வர்சடைல் ஆர்டிஸ்ட்" என்பதால் அடிக்கடி படங்களில் நடித்து அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.. ஆனால் அவரை எது தடுக்கிறது? என்று தெரியவில்லை..
சண்முக பாண்டியன், சிபி சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் மகன் சிபி நல்ல நடிகர்.. நல்ல உயரம் மற்றும் திறமை கொண்டவர், சில ஹாரர் படங்களில் நடித்து, அவை பெரிய ஹிட் அடித்தன.. இப்படியான மூத்த நடிகர்கள் சொந்த படம் எடுத்து ரிஸ்க் எடுக்க தேவையில்லை என்றாலும், வெளிப்படங்களில் நல்ல வேடங்களை தேர்வு செய்து நடித்து பெயர் வாங்கலாம்..
கார்த்தி மற்றும் சூர்யா எப்படித் தங்கள் வேலையில் அர்ப்பணிப்புடன் இறங்கினார்களோ, அதுபோல மற்ற வாரிசுகளும் களத்தில் இறங்க வேண்டும்..
சந்திரசேகர் தன்னுடைய மகன் விஜய்யை மிகச்சரியாக வடிவமைத்து உருவாக்கினார்.. விஜய் அந்த பாதையை சரியாகப் பிடித்துக்கொண்டு இன்று வெற்றி பெற்றுள்ளார்.. மற்ற வாரிசு நடிகர்களுக்கு ஏன் அந்தத் தெளிவான சிந்தனை வரவில்லை
விஜயகாந்த் தந்த வாழ்க்கை
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனும் அப்படித்தான்.. விஜயகாந்த் செய்த தர்மம் அவர் மகனை ஒரு காலத்தில் காப்பாற்றி முன்னுக்குக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.. ஏனென்றால், மன்சூர் அலிகான், சரத்குமார் போன்ற பல நடிகர்களுக்குத் தனது படங்களில் வாய்ப்பளித்து வாழ்க்கையை தந்தவர் விஜயகாந்த் ..
சிவகார்த்திகேயன் சாருக்கு ஏற்ற இறக்கங்கள் சினிமாவில் வந்தபடி இருக்கும்.. தனக்கான கேரக்டர்களை தேர்ந்தெடுக்க கூடியவர்.. இப்படியான கேரக்டர்களை வாரிசு நடிகர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்
விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்
மாஸான கேரக்டர்களில் நடித்து வந்தார் விக்ரம் பிரபு.. ஆனால், அதற்கு பிறகு எளிதான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. இப்போதுதான் சிறை படம் கை கொடுத்துள்ளது.. இதே ரூட்டில் கவுதம் கார்த்திக்கும் வர வேண்டும்.
நடிகர் சிவகார்த்திகேயன் , தன்னுடைய படங்களுக்காக செய்யும் மெனக்கெடல்கள் அதிகம்.. ஒரு படத்திற்கான ஸ்கிரீன் பிளேவுக்கு 6 மாதம், அதன் டிசைனிங்குக்கு 6 மாதம், நடிப்பதற்கு 6 மாதம் என்று அவர் காட்டும் அர்ப்பணிப்புதான், அவரது பட வெற்றிக்குக் காரணம்.. எனவே ஒரு படம் பிரமாதமாக ஓடுகிறதோ இல்லையோ, மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தனது கேரக்டரை செதுக்க ஒரு நடிகர் மெனக்கெட்டால் நிச்சயம் வெற்றி தானாக வரும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications