இன்னும் ஒரு நாள் தான் கெடு..அப்பறம் எல்லாம் ’அவங்க’ கையில்..! மொத்தமாய் இறங்கும் பவர்..ஹை அலர்ட்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாளையுடன் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான கெடு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தேர்தல் ஆணையம் சட்ட விரோத பணப்பட்டுவாடா உள்ளிட்ட விஷயங்களை கண்காணிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

The deadline for political parties to campaign in Tamil Nadu ends at 6 pm tomorrow

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் 18வது மக்களவையின் 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.

கட்டுப்பாடுகள்: இந்நிலையில் மாலை 6 மணி முதல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அமைதி பிரச்சாரம், துண்டு பிரசார விநியோகம் உள்ளிட்ட எந்தவிதமான வடிவ பிரச்சாரங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

19ஆம் தேதி வாக்குப்பதிவு: ஆறு மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படும் என தேர்தல் ஆணை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அது மட்டும் அல்லாமல் விளவங்கோடு தொகுதியில் 10 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கும் நிலையில், வெல்ல போவது யார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியானது அப்போதிலிருந்து கடந்த 15 நாட்களாக தேர்தல் ஜுரம் பற்றி கொண்டுள்ளது.

நான்கு முனை போட்டி: திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி , நாம் தமிழர் கட்சியினை நான்கு முறை போட்டி நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் சுயேச்சைகளும் தற்போது களத்தில் இறங்கி இருக்கின்றனர். இந்தியாவில் நடைபெறும் இந்த பதினெட்டாவது மக்களவைக்கான முதல் தேர்தல் என்பதால் தமிழகத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்று இருக்கிறது இதையடுத்து பல தேசியத் தலைவர்களும் தமிழ்நாட்டில் பல முறை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் கடந்த நான்கு மாதங்களில் எட்டு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்.

தீவிர பிரசாரம்: இது மட்டுமில்லாமல் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய தலைவர்கள்: இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை நிறைவடைய செய்ய வேண்டும் என்பது விதி. இதை அடுத்து தேசிய தலைவர்களும் தமிழக தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது தமிழகத்தின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். மேலும் நீலகிரியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விவசாயிகளை சந்தித்து பேசினார். இதை அடுத்து தற்போது இறுதி கட்ட பிரசாரத்திற்காக தமிழக தலைவர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இறுதி கட்ட பிரசாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் வடசென்னை திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் இன்று தென் சென்னை மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னையில் பிரச்சாரத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தலைவர்கள் இறுதி கட்ட சார பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்பு தீவிரம்: இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் ஏப்ரல் 17ஆம் தேதியான நாளை மாலை 6:00 மணி உடன் அனைத்து வகையான பிரச்சாரங்களும் நிறைவடைகிறது எனவும் அந்த நேரத்திற்குள் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு பொருள் வழங்குவது பணப்பட்டுவாடா உள்ளிட்டவத்தை தடுப்பு தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+