பனையூர் ஆபீஸில் இன்று முதல் பெரிய சம்பவம்.. தவெக விருப்ப மனு.. தாமதமாக என்ட்ரி தரும் விஜய் தரப்பு
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கம் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தும் நிலையில், மறுபக்கம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களை பெறுவதற்கு கட்சிகள் அழைப்பு விடுத்து, மனுக்களை வாங்கி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்களது களப்பணியை தீவிரப்படுத்தி இருக்கினறன. ஏப்ரல் 3-வது வாரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி இருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. (அன்புமணி), அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் தலைமையிலான த.வெ.க.வும் ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் யாரும் இதுவரை கூட்டணியில் இணையவில்லை. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
தவெக அறிவிப்பு
இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்களிடம் விருப்ப மனு பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் , சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளது.
விருப்ப மனு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில், இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இன்று முதல் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை தங்களது விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.
தவெகவினர் உற்சாகம்
இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் முதல் தேர்தல் களம் என்பதால், இளைஞர்கள் மற்றும் நீண்டகாலமாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகம் இருப்பதை காண முடிகிறது.
கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள்
மனுக்களைப் பெறுபவர்கள் கட்சியின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் அனைத்தும் தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியான வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை கட்சித் தலைவர் விஜய் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் எடுப்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசியல் முக்கியத்துவம்
ஏற்கனவே கட்சியின் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை மூலம் தனது பலத்தை நிரூபித்த விஜய், தற்போது வேட்பாளர் தேர்வுக்கான பணிகளில் இறங்கியிருப்பது மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த விருப்ப மனு விநியோக நடைமுறை, தவெகவின் தேர்தல் வியூகத்தின் முதல் படியாகப் பார்க்கப்படுகிறது.
-
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications