சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர்கள் நம்பிக்கை.. தலித்துகளின் வாக்கு வங்கி.. திமுகவுக்கு காத்திருக்கும் இரட்டை சவால்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu local body elections | திமுகவுக்கு காத்திருக்கும் இரட்டை சவால்!

    சென்னை: திமுக இரண்டு விஷயங்களை சரிகட்டினாலே.. வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கான சாத்தியங்கள் தென்படும் என்ற சீரியஸ் விவாதங்கள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.

    அதிமுகவுக்கு இணையாகத்தான் திமுக இந்த முறை இடைத்தேர்தலை சந்தித்தது. ஆனாலும் ஓவர் கான்பிடன்ட் சறுக்கலில் கொண்டு போய் விட்டுவிட்டது.

    இப்போது அதிமுக தொடர்ந்து ஆட்சியை இழக்காமல், செல்வாக்கையும் பெருக்கி கொண்டு, மீண்டும் கெத்து காட்டி வருகிறது. அது மட்டுமல்ல.. ஜெயலலிதா இறந்தாலும் அதிமுக அதன் வாக்கு வங்கியை இழக்கவில்லை என்பதையே இந்த தேர்தலும் நிரூபித்து இருக்கிறது. இதை வைத்து உள்ளாடசி தேர்தலிலும் பெரிய அளவில் கணக்கு பண்ணி காய் நகர்த்துகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு உரக்க கூறிய சுப்ரீம் கோர்ட்.. இதை செய்திருந்தால் சுஜித் இருந்திருப்பான்!10 ஆண்டுகளுக்கு முன்பு உரக்க கூறிய சுப்ரீம் கோர்ட்.. இதை செய்திருந்தால் சுஜித் இருந்திருப்பான்!

    விசிக

    விசிக

    இரு தொகுதிகளின் வெற்றியை திமுகவினால் ஜீரணிக்க முடியவில்லை என்றே தெரிகிறது. தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் ஒன்று விசிகவின் வாக்கு வங்கி குறைந்திருப்பது தெரியவந்தது. அதாவது, வன்னியர்களின் ஓட்டுக்கள் விழாமல் போய்விடக்கூடாது என்பதற்காக திமுக போட்ட பிளான், விசிகவின் தலித் வாக்குகளை மட்டுமல்லாது, திமுகவில் இருக்கும் தலித் வாக்குகளைகூட பெற்று தராமல் போனதுதான் ஷாக்.

    ராமதாஸ்

    ராமதாஸ்

    மேலும் திமுகவின் தலித் வாக்குகளேகூட, அதிமுகவுக்கு மாறியுள்ளது அதைவிட ஷாக். அதனால் தலித் வாக்குகளை அள்ள திமுக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மற்றொரு காரணம், ஆண்டி ராமதாஸ் ப்ரோ வன்னியர் ஸ்ட்ரேட்டஜி அதாவது... வன்னியர்களின் வாக்குகளை கவருவதற்காக திமுக தலைமை எடுத்து கொண்ட முயற்சிகள் அவ்வளவும் எதிரே திரும்பிவிட்டதுதான் பெரிய மைனஸ்!

    சீனியர்கள்

    சீனியர்கள்

    ஏற்கனவே எவ வேலுவும், பொன்முடியும் வன்னியர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்து வருவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. இதில் ஓரளவு பேச்சு வாங்காமல் தப்பித்தவர் துரைமுருகன்தான் போலும்! வாக்கு வங்கியை பெற, திமுகவின் பலத்தை நிரூபிக்க.. சீனியர்களே என்றாலும்கூட, அதை பரிசீலனையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, அப்படியே வழிமொழிவது சரிப்பட்டு வராது என்பதும் தெரியவந்துள்ளது. அதனால்தான், பொன்முடி தனது சுயநலத்துக்காக கட்சியை காவு வாங்கிவிட்டார் என அதிருப்தி குரல்கள் இப்போது வரை எழுந்துள்ளன.

    நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    அதனால் திமுக தன்னை சரிப்படுத்தி கொள்ள வன்னியர்களின் ஆதரவை முதலில் கட்சிக்குள்ளேயே பலப்படுத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அப்படியானால் வன்னியர்களின் ஓட்டும் இல்லாமல், தலித் ஓட்டுக்களும் இல்லாமல், இடைத்தேர்தலில் திமுக குறிப்பிட்ட வாக்கு சதவிதத்தை எட்டிப்பிடித்ததற்கு காரணம்.. முஸ்லிம்-கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை சாதி வாக்குகள்தான்!

    திமுக

    திமுக

    இதேபோன்ற ஒரு நிலை வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. இவ்வளவு காலம்வரை உள்ளாட்சி தேர்தல் என்றாலே அதிமுகவைவிட கொஞ்சம் கூடுதல் மாஸ் தான். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வலிமையை யாராலும் அடித்து கொள்ளவே முடியாது. இது மிகப்பெரிய பலமாக இப்போதும் திமுகவுக்கு உள்ள நிலையில், சிறு குறைகளை சுயமதிப்பீடு செய்து, அதனை சரி செய்து கொண்டால் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி கண்டிப்பாக உயரவே செய்யும்!

    English summary
    local body elections: The dmk needs to win the local body elections and should correct its 2 grievances
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X