மாந்திரீகம்.. எண்ணூரை நடுங்க வைத்த காளி சிலை.. வட சென்னையை அதிர வைத்த பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார்.இவர் அதனை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இதையடுத்து வருவாய்த்துறையினர் காளி சிலையை அகற்றினார்கள். இதனால் கார்த்திக் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காளி சிலையை ஊருக்குள் கொண்டுவந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மாந்திரீகம் , காளி பூஜை என்பதை நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். கெட்ட விஷயங்கள் நடக்க மாந்திரீகம், பூஜை காரணம் என்று இன்று வரை பலர் நம்புகிறார்கள். அதற்கு உதாரணம் தான் வடசென்னையில் உள்ள எண்ணூரில் நடந்த சம்பவம் ஆகும்.

The entire people in ennore is strongly opposing the installation of the Kali statue

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் 3-வது தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்தார். மேலும் கார்த்திக் அங்கு காளி சிலையை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையிலான வருவாய்த்துறையினர் காளி சிலையை அகற்றி கொண்டு சென்றுவிட்டார்கள்.

இதையடுத்து கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் தனது வீட்டில் காளி சிலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றார். கடந்த வெள்ளிக்கிழமை காளி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க அவர் முயன்றார். ஆனால் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நெட்டுக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் காளி சிலையை கார்த்திக்கிடம் தாசில்தார் ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து கார்த்திக், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நேற்று மாலைக்குள் சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாசில்தாருக்கு உத்தரவிட்டார்கள். அதன்பேரில் தற்போதைய தாசில்தார் திலீப் குமார் சிலையை கார்த்திக்கிடம் ஒப்படைத்தார்.

கார்த்திக் சிலையை எடுத்து கொண்டு நெட்டுக்குப்பம் நோக்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். இதையறிந்த எண்ணூர் நெட்டு குப்பம், தாழங்குப்பம், முகத்துவார குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் பொதுமக்கள், காளி சிலையை ஊருக்குள் கொண்டு வர விடமாட்டோம் என்று கூறி நெட்டுக்குப்பத்தில் சாலையின் குறுக்கே கருப்பு கொடியை கட்டியதுடன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். மறியலில் ஈடுபட்ட பெண்கள் வாயில் கருப்பு துணியும் கட்டி இருந்தார்கள்.

அங்கு வந்த எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் கார்த்திக்கை அழைத்து வந்து கிராம மக்களிடம் பேசும்படி தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் ஊருக்குள் சிலையை கொண்டு வர விடமாட்டோம் என்று கோஷமிட்டனர். இதையடுத்து கார்த்திக், காளி சிலையை வேறு ஒரு ஊரில் கொண்டு வைப்பதாக கூறி வாகனத்தில் எடுத்து சென்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். மொத்தஊர்மக்களும் ஒன்று திரண்டு காளி சிலையை நிறுவ விடாமல் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+