பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்.. வன்முறை பேச்சு.. சீமானுக்கு சுத்துபோடும் ஈரோடு போலீஸ்
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது பொதுக் கூட்டத்தில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் வைத்துள்ளது வெங்காயம், என் தலைவன் கையில் வெடிகுண்டு பி கேர்புள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், சீமானுக்கு சம்மன் வழங்க மூன்றாவது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரையில் முகாமிட்டுள்ளனர்.
சீமான் தொடர்பான நடிகை பாலியல் வழக்கு, சர்ச்சை பேச்சு என்று நாள்தோறும் அனல் பறக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது பொதுக் கூட்டத்தில் என் தலைவன் கையில் வெடிகுண்டு பி கேர்புள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய வழக்கில், சீமானுக்கு சம்மன் வழங்க மூன்றாவது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரையில் முகாமிட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிட்டார். அவரை ஆதரித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு அசோகபுரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பேசினார். அப்போது, "உன் பெரியார் வைத்துள்ளது வெங்காயம். என் தலைவன் வைத்துள்ளது வெடிகுண்டு. பி கேர்ஃபுல்" என்று பேசினார்.
சீமானின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில், சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கினர். ஆனால், சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்குவதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் சென்னை நீலாங்கரைக்கு சென்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் சீமான் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததோடு, நடிகை பாலியல் வழக்கு தொடர்பான வழக்கில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதைத்தொடர்ந்து, சம்மன் வழங்குவதற்காக 2வது நாளாக நேற்றும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சென்னை நீலாங்கரையில் முகாமிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, சம்மன் வழங்க மூன்றாவது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரையில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications