திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு.. நேற்று உயர்நீதிமன்றத்தில் நடந்த இறுதி வாதங்கள்.. முழு விவரம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தொடர்ந்து 5-வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. நேற்றைய விசாரணையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வக்கீல் மோகன் , மூத்த வக்கீல் வள்ளியப்பன் ஆகியோர் பல்வேறு வாதங்களை வைத்தனர். இறுதி வாதங்களின் முழு விவரங்களை பார்ப்போம்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்களையில் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணை நடந்து வந்தது. 5-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தபோது இறுதி வாதங்கள் வைக்கப்பட்டன. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மூத்த வக்கீல்கள் எஸ்.ஸ்ரீராம், ஜி.கார்த்திகேயன், ஆஜராகி வாதாடினார்கள்.

தீபத்தூண் என்று ஆதாரம் கிடையாது
அரசு தப்பில் ஆஜரான அவர்கள் வாதிடுகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றும்படி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் பல்வேறு வகையிலான கருத்துகளை தெரிவித்து இருந்தாலும் அரசின் கருத்துகளே இறுதியானவை. அவர்கள் கூறும் தூண் தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் கிடையாது. அவர்களும் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை.
தூணில் தீபம் ஏற்றும் நடைமுறை
திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை பல ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் தூணில் தீபம் ஏற்றும் நடைமுறைக்கு மாற்றாக மதுரை உயர்நீதிமன்ற தனிநீதிபதி (ஜிஆர் சுவாமிநாதன்) உத்தரவிட்டிருக்கிறது இந்த உத்தரவின் மூலம் இதனை சொத்து உரிமை வழக்காக மாற்றும் முயற்சியாகும். பொதுகோவிலில் திருவிழாக்களை முறையாக நடத்துவதற்கும், பக்தர்கள் பங்கேற்பதற்கும் உரிமையுண்டு என 1945-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சார்புடைய நிலைப்பாட்டை எடுக்கவில்லை
கோவில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கோவில் செயல் அலுவலர் முடிவு எடுக்க அறநிலையத்துறை சட்டப்பிரிவு அதிகாரம் வழங்கியிருக்கிறது. எனவே அவருடைய உத்தரவுக்கு எதிராக துணை கமிஷனர், கமிஷனர், சிவில் கோர்ட்டு என 4 நிலைகள் இருக்கிறது. அங்கெல்லாம் செல்லாமல் நேரடியாக மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வந்தது ஏற்புடையது கிடையாது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை மாநில அரசு ஒரு சார்புடைய நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மனுதாரர்கள் தெரிவிக்கும் தூண் பழமையான தூணாக இருக்கலாம் என்று வாதிட்டனர்.
விவரங்கள் இல்லை
அப்போது குறுக்கிட்ட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர், எத்தனை ஆண்டுகள் பழமையானது? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் , அதுதொடர்பான விவரங்கள் தெரியவில்லை என தெரிவித்தார்.
நீதிமன்றம் தலையிட முடியாது
பின்னர் தனது வாதத்தை தொடர்ந்த பிஎஸ் ராமன், 100 ஆண்டுக்கு முன்பு இதே விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அவரது உத்தரவில், மலை உச்சியில் தர்காவை தவிர வேறு கட்டிடம் இல்லை. மலையின் நடுப்பகுதியில் உச்சிப்பிள்ளையார் கோவில் இருந்ததாக கூறியுள்ளார். ஒரு வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பித்த பின்பு, மீண்டும் அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதாக இருந்தபோதும் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் அரசபாண்டி என்பவர் தனது கோரிக்கை குறித்து முறையாக அறநிலையத்துறை அதிகாரிகளை அணுகியுள்ளார். இதுதொடர்பாக அவர் விரும்பினால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஎஸ் ராமன் கூறினார்.
நடைமுறையில் இருந்தது
பின்னர் அரசபாண்டி, பரமசிவம் தரப்பில் மூத்த வக்கீல்கள் எஸ்.ஸ்ரீராம், ஜி.கார்த்திகேயன் ஆஜராகி வாதிடுகையில், "மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்ட திருப்பரங்குன்றம் தலவரலாறு என்ற புத்தகத்தில் பல்வேறு விவரங்கள் உள்ளன.
தீபத்தூணில் தீபம்
அதில் 10 நாள் கார்த்திகை திருவிழா நடைபெறும். 9-ம் நாள் விழா அன்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்படும். திருக்கோவில் உள்ளும், மலை மீது உள்ள தீபத்தூணிலும் தீபங்கள் ஏற்றப்படும். இவ்வாறு தலவரலாறு புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகத்தை 1961-ம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் வெளியிட்டிருக்கிறது. எனவே மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த காலங்களில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்களை கோவில் தேவஸ்தானத்தின் புத்தகமே உறுதி செய்துள்ளது.
சமணர் கல்வெட்டு
அந்த மலையின் பெரும்பகுதி திருப்பரங்குன்றம் தேவஸ்தானத்துக்கு சொந்தமானது. மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தின் அருகே கொடிமரம் நட்டு அப்பகுதியை தங்களுக்கு சொந்தமானது என தர்கா உரிமை கொண்டாடும் நிலை வரும். சமணர் கல்வெட்டுகளை வர்ணம் பூசி அழித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. தொல்லியல்துறையின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
சிக்கந்தர் தர்கா தரப்பு
சிக்கந்தர் தர்கா தரப்பில் மூத்த வக்கீல் மோகன் ஆஜராகி வாதாடுகையில், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையது கிடையாது. சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டுதான் உரிய பரிகாரம் தேட முடியும் என்று கூறினார்.
ராமரவிக்குமார் தரப்பு
ராமரவிக்குமார் தரப்பில் மூத்த வக்கீல் வள்ளியப்பன் வாதிடுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவிலும் தீபம் ஏற்றும் வழக்கம் இருக்கிறது. ஆக தீபம் ஏற்றும் கலாசாரம் அனைத்து தரப்பினரிடமும் இருக்கிறது. எனவே தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ராமரவிக்குமார் மனு அளித்த பின்புதான், அந்த தீபத்தூணை மறைக்கும் முயற்சியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. எனவே கோவில் நிர்வாகம் தன்னுடைய உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடாதது சட்டவிரோதம் என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications