பிரதமை நாளில் எமகண்ட நேரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்
ஆடி அமாவாசை முடிந்து பிரதமை நாளில் சரியான எமகண்ட நேரத்தில் அதிமுக ஆட்சி காலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
சென்னை: பிரதமை நாளான இன்று சரியான எமகண்ட நேரமான 11.30 மணிக்கு அதிமுக ஆட்சி காலத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன்.
முதல்வர் மு.க ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் நான்தான் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு நல்லகாரியம் செய்வதற்கு முன்பாகவும் நாள் நட்சத்திரம் நேரம் காலம் பார்ப்பது வழக்கம். அமாவாசை, பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதி அதனை பாட்டிமை என்றும் கூறுவார்கள். அந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.

இதே போல ராகுகாலம், எமகண்டம், குளிகை நேரத்திலும் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். காரணம் இந்த நேரத்தில் மேற்கொள்ளும் காரியம் ஜெயிக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.
இந்த சூழ்நிலையில் பிரதமை திதியான இன்றைய தினம் சரியான எமகண்ட நேரத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன். கடனை வாங்கி கட்டாய செலவு செய்த காரணத்தால் நிதி சரிந்து விட்டது என்று கூறியுள்ளார் நிதியமைச்சர்.
எங்கள் கட்சியின் தத்துவம், குணம் ஆகியவற்றை தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது
முறைகேடுகளை திருத்த முடியும் என்ற அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறோம் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமை தினத்தில் போர் பிரகடனம் செய்யவோ, கோமாதா என்றழைக்ககூடிய பசு வாங்கவோ உகந்த நாளாகும். ராகு காலம் என்று சொல்வது போல கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.
ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாக கருதப்படவில்லை, அந்தக் காலத்தை ஒதுக்கி வைத்தார்கள்.
நம் மனம் என்பது சந்திரனைக் குறிப்பதால் ராகு மற்றும் எமகண்ட காலங்களில் அதன் தாக்கம் அவ்வளவு சரியாக இயங்காது. அதாவது கிரகண காலங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேதுவால் ஏற்படக்கூடிய சூரிய, சந்திர கிரகண காலங்களில் அதன் ஒளியானது தடைப்பட்டு, நம் ஆத்மாவுக்கும், மனதுக்கும் சரிவர கிடைக்காத காரணத்தால் நம் ஆத்மா என்று சொல்லக்கூடிய இதயமும், மனம் சிந்தனை ஆகியவற்றைச் செயல்படுத்தும் மூளையும் இயல்பான கதியில் இருந்து சற்று மாறுபட்டு இயங்குவதால், அதற்கு உண்டான தினப்படியான காலத்தையும் சுபகாரியங்களுக்கு ஒதுக்கி வைக்கும்படி சொன்னார்கள்.
இன்றைய தினம் வெள்ளை அறிக்கையை சரியான எமகண்ட நேரத்தில் வெளியிட்டுள்ளார். மொத்தத்தில் கடந்த 10 ஆண்டு காலத்தில் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள நஷ்டம், இழப்பீடு குறித்து தெரிவிப்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருமானத்தை விட செலவு அதிகரித்துள்ளது என்றும் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்று கூறியுள்ளார் பிடிஆர் பழனிவேல் ராஜன்.












Click it and Unblock the Notifications