பதவி பறிப்புக்கு பிறகு முதல் சந்திப்பு! ஆவடி நாசரை தோளில் தட்டிக்கொடுத்து எனர்ஜி தந்த ஸ்டாலின்!
சென்னை: அமைச்சர் பதவியை பறித்த பிறகு தன்னை முதல்முறையாக சந்தித்த ஆவடி நாசரை தோளில் தட்டிக்கொடுத்து எனர்ஜியாக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் மனதளவில் சோர்வடைந்து காணப்பட்ட நாசரை, பார்த்துக்கலாம் கவலைப்படாதே என்பதை போல் முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன் கொடுத்தார்.

நாசரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த போது முகமெல்லாம் சிரிப்புடன் தனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்பதை போல் காட்டிக்கொண்டார்.
இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினை நாசர் சந்தித்த போது அமைச்சர்களும், அங்கிருந்த திமுக முக்கிய பிரமுகர்களும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஸ்டாலினுக்கும் நாசருக்கும் இடையேயான நட்பு என்பது இன்று நேற்றல்ல ஏறத்தாழ 30 ஆண்டுகால நட்பு என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞரணி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் ஸ்டாலினுடன் தமிழ்நாடு முழுவதும் பயணித்த மூன்று பேரில் நாசரும் ஒருவர்.

முன் கோபத்தால் தான் அமைச்சர் பதவியை இழந்து நிற்கும் நாசர், தற்போது திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும், ஆவடி சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்கிறார்.
இதனிடையே வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என்றும் அதில் நாசர் இடம்பெறுவார் எனவும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications