தனுஷுக்கு முன்பே கதையை ஆஸ்கரில் பதிவு செய்த முதல் தமிழர்! யார் இவர்?
சென்னை: தனுஷின் 'ராயன்' படத்திற்கு முன்பே ஆஸ்கர் நூலகத்தில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட திரைக்கதை தன்னுடையதுதான் என்று ஃபேஸ்புக்கில் ஒருவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆஸ்கர் என்று சொன்னவுடன் நினைவுக்கு வரும் முதல் முகம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடல் மிகச் சிறந்த பாடலாகத் தேர்வு செய்யப்பட்டதால் இரண்டு விருதுகளை ஒரே சமயத்தில் ரஹ்மான் வென்றிருந்தார். இவருக்கு முன்னால் ஆஸ்கர் விருது என்பது இந்தியாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகத்தான் இருந்து வந்தது. இப்போது மீண்டும் தனுஷ் இயக்கியுள்ள 'ராயன்' படத்தின் மூலம் ஆஸ்கர் என்ற வார்த்தை மறுபடியும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.

ஆஸ்கர் அகாதெமியின் ஒரு பகுதியாக மார்கரெட் ஹெரிக் லைப்ரரி ஒன்று செயல்பாட்டிலிருந்து வருகிறது. இதில், சினிமா தொடர்பாகப் பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கே சினிமா தொடர்பான 32,000 புத்தகங்கள், 80,000 திரைக்கதைகள்,300,000 கிளிப்பிங் கோப்புகள் உள்ளன. மேலும் 35,000 சினிமா போஸ்டர்கள், 10 மில்லியன் சினிமா ஸ்டில்ஸ், 2,400 சினிமா இதழ்கள், திரை நட்சத்திரங்கள் எழுதிய கடிதங்கள், உடைகள், ஓவியங்கள், இசைத் தட்டுகள், இசை குறிப்புகள் எனப் பல ஆவணங்கள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் எங்கும் கிடைக்காத அரிதான பொருட்களை இங்கே பார்க்க முடியும். ஆய்வு தேவைக்காக யாரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும்படி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
சினிமா தொழில் குறித்தும், அந்தக் கதை பற்றியும் மோஷன் பிக்சர் வளர்ந்து வந்த வரலாற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறவர்களின் இடமாக இந்த நூலகம் இருந்து வருகிறது. ஆஸ்கர் அகாதெமி நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து 1928இல் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 1991இல் இந்த நூலகம் பெவர்லி மலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நூலகத்தில் 'லகான்', 'தேவதாஸ்', 'சக் தே இந்தியா', 'ரான் ஆன்' 'ஹேப்பி நியூ இயர்' போல பல இந்தியப் படங்களின் திரைக்கதைகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'பார்க்கிங்' படத்தின் திரைக்கதையும் இடம்பெற்றுள்ளது. அதை அப்படக்குழு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
இதனிடையே தனுஷ் இயக்கத்தின் வெளியாகி ஓடிக்கொண்டுள்ள 'ராயன்' படத்தின் திரைக்கதை இந்த ஆஸ்கர் நூலகத்தில் இடம் பெற்றுள்ளதாக இப்படத்தினை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் வலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிங்கார வேலன் என்பவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனது திரைக்கதைதான் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் நூலகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் திரைக்கதை தன்னுடையது தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சிங்கார வேலன் அவரது ஃபேஸ்புக் பதிவில், "ராயன் படத்திற்கு முன்பே, அதாவது இந்தியாவில் முதன்முறையாக ஆஸ்கர் அமைப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் திரைக்கதை என்னுடைய திரைக்கதை தான். பதிவு செய்யப்பட்ட வருடம் 2016. கீழே படத்தில் இருப்பது பதிவு செய்யப்பட்டதற்காக ஆஸ்கர் அமைப்பிலிருந்து எனக்கு வந்த இமெயில். இதைப்பற்றி மேலும் சில தகவல்கள்.

1. திரைக்கதைகளைப் பதிவு செய்வதற்கு ஆஸ்கர் இரண்டு அமைப்புகளாகச் செயல்படுகிறது.
2. திரைப்படமாக வெளிவராத திரைக்கதைகளை Nicholl என்கிற அமைப்பு பதிவு செய்து கொள்கிறது. இதற்குக் கட்டணம் நூறு அமெரிக்க டாலர். Tax உட்பட கிட்டத்தட்ட 8000 ரூபாய்.
3. திரைப்படமாக வெளிவந்த திரைக்கதைகளை Oscar என்கிற அமைப்பு பதிவு செய்து கொள்கிறது. இதற்குக் கட்டணம் தெரியவில்லை. அதற்குக் காரணம், நீங்கள் தயாரிப்பாளராக அல்லது இயக்குநராக இருந்தால் மட்டுமே இந்த பிரிவுக்கு உள்ளே செல்ல முடியும்.
4. யார் வேண்டுமானாலும் இங்கு திரைக்கதைகளைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
இதைப்பற்றி சில வருடங்களுக்கு முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அந்த முக்கிய குறிப்பு:
1. திரைப்படமாக வெளிவந்த திரைக்கதைகளை ஒருமுறை பதிவு செய்தால் போதும். அது ஆஸ்கர் நூலகத்தில் இடம் பெற்றுவிடும். அதற்கு பிறகு அங்கு இருக்கும் திரைக்கதைகளை யார் வேண்டுமானாலும் சென்று படித்துக் கொள்ளலாம். Download செய்யும் வசதி முன்பு இருந்தது. இப்போது இல்லை. ராயன் திரைக்கதை இப்படித்தான் இடம் பெற்றிருக்கிறது.

2. திரைப்படமாக வெளிவராத புதிய திரைக்கதைகளை ஒவ்வொரு வருடமும் பதிவு செய்ய வேண்டும். அது அங்கு இருக்கும் நூலகத்தில் நிரந்தரமாக இடம்பெற வேண்டும் என்றால் அங்கே நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். பதிவு செய்வதற்கான கால கட்டம்: February 1 to May 2. September - October மாதங்களில் முடிவு தெரிவிக்கப்படும்.
3. அதே சமயம் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் நூலகத்தில் இடம் பிடிக்க அல்லது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பார்வையில் படுவதற்கு இதிலேயே Black List என்கிற இன்னொரு அமைப்பு இருக்கிறது. இதற்கு ஒவ்வொரு வருடமும் இந்திய ரூபாய் 10,000 முதல் 15,000 வரை செலவாகும். இங்கு பதிவு செய்யப்பட்டு விட்டால் உங்கள் திரைக்கதையைப் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் படித்துப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் உங்களை தங்கள் படத்திற்குத் தேர்வு செய்து கொள்வார்கள். இப்படித் தேர்வான புதிய எழுத்தாளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
என்னுடைய திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இரண்டு வருடங்கள் இருந்தது. இதன் காரணமாக 2018ல் Shawshank Redemption படத்தின் இயக்குநர் Frank Darabond உடன் ஒரு மணி நேரம் என்னைப் போன்று நிறையப் பேர் Google Meetல் அவரோடு உரையாட முடிந்தது. கீழே படத்தில் இருப்பது ஆஸ்கர் மின்னஞ்சல் முகவரி. அதில் உள்ளே சென்று மேலும் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications