ஏற்கனவே 3.. இதுல 4வதுக்கு முயற்சித்த அஜீத் குமார்.. லபக்கென்று கொத்திக் கொண்டு போன போலீஸ்!
3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: ஏற்கனவே 3.. இதில 4-வது பொண்டாட்டிக்கு ட்ரை பண்ணின அஜித்குமாரை போலீசார் லபக்கென்று தூக்கி சென்றுவிட்டனர்.
கேரளாவை சேர்ந்தவர் அஜித்குமார். வயசு 46. சென்னை சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருக்கு கல்யாணமாகி தேவிகா என்ற மனைவியும் 6 வயசில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தேவிகா, வளசரவாக்கம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தன் கணவன் ஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணே தன்னிடம் இதை பற்றி சொல்லியதாகவும் புகாரில் கூறியிருந்தார். விஷயம் தெரிந்ததால், தன்னை கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்றும் தேவிகா தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான், அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 கல்யாணம் நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது 1998-ம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்பவரையும், 2001-ம் ஆண்டில் டெலிலா என்பவரையும் கல்யாணம் செய்திருக்கிறார். 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
3-வதுதான் தேவிகா என்பவர். மேலும் இந்த 3 பேரையும் தவிர்த்து 4-வதாக இன்னொரு கல்யாணமும் செய்யும் முயற்சியிலும் உள்ளாராம். எல்லாவற்றையும் போலீசாரிடம் அஜித்குமார் சொல்லியதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications