இனி ராக்கெட் மாதிரி.. விடாமல் தங்கத்தின் விலை உயரும்.. ரூ.17 ஆயிரம் உயரப்போகிறதா? வார்னிங்!
சென்னை: சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கியதில் இருந்து, தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது அவுன்ஸ் ஒன்றுக்கு $2,900க்கு மேல் வர்த்தகம் செய்கிறது. இது 200 டாலர் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 3100 டாலர் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
1. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன.
2. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
3. இதே போல் அமெரிக்கா வர்த்தக போருக்கு இடையே.. தங்கத்தின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மக்கள் தங்கம் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கலாம்.
4. இதனால் அதற்கு முன் தங்கம் வாங்குவதற்கு அமெரிக்கர்கள் முயலலாம். அதன்படி பலர் தங்கத்தை வாங்கி குவிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
5. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹8,787 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,055 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹6,625 ஆகவும் உள்ளது.
6. வர்த்தக போர் காரணமாக.. உலகம் முழுக்க பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். தங்கம் பக்கமே தனி நபர்கள், அமைப்புகள், ஏன் நாடுகள் கூட செல்லும். பொதுவாக வர்த்தக போர் சமயத்தில்.. உலகம் முழுக்க பங்குச்சந்தை சரமாரியாக சரியும். இந்தியாவிலும் அதேதான் நடக்கிறது
7. ஆனால் தங்கம்தான் ரியல் பணம் என்பதால்.. அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். அதன் மதிப்பு வலுவாக இருக்கும். இதனால் அடுத்த சில வருடங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கும். அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. இதன் காரணமாக சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
9. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
10.அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட தொடங்கி உள்ளது. இனியும் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications