பிப்.19 தமிழகத்தில் பொது விடுமுறை..சிறப்பு இதழில் அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு.. எங்கெங்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிப்ரவரி 19ஆம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ( கடப்பூர் பேரூராட்சி தவிர ) என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, மொத்தம் 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

The Government of Tamil Nadu has announced that a public holiday will be declared on February 19

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சிறப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி 489 பேரூராட்சிகளில் (கடம்பூர் பேரூராட்சி) தவிர பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் 17, 18, 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் சிரமமின்றி வாக்கு அளிக்கும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தில் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+