சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கக்கூடாது.. பாஜக வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் நிலைப்பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The government of Tamil Nadu should not give pattas to the occupied temple lands: BJP

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு கோவில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோவில் வாரியாக கருத்துக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தது. அத்துடன் கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் நிலைப்பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

காய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்!காய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்!

இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், கோயில் நிலங்களை பலகாலமாக ஆக்கிரமித்துள்ளோருக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கோயில் நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவது போலுள்ளது என நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகும், தமிழக அரசு இந்த முடிவை தெரிவித்துள்ளது.

பலராலும் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பு பெறும் என்றும், தனது நிலைப்பாட்டை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

English summary
BJP demand that The government of Tamil Nadu should not give pattas to the occupied temple lands
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X