‘குணா குகை’ நிஜம் இல்லையா? செட்டா? மஞ்சும்மல் பாய்ஸ்’ சீக்ரெட்!
சென்னை: 'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற 'குணா குகை' முழுமையாக உண்மையானது இல்லை என்று தெரியவந்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள குணா குகையை நோக்கி வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்தான் காரணம்.

இந்தப் படம் வெளியானதிலிருந்து பலரும் மலரும் நினைவுகளாக தங்கள் மனதில் தங்கியிருக்கும் குணா குகை பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் நிழற்படங்களாகப் பகிர்ந்து வருகின்றன.
அடி ஆழத்திலிருந்து வானத்தை நோக்கி வளர்ந்து நிற்கும் தூண் பாறைகள் தான் இந்தக் குணா குகையின் சிறப்பு. சின்ன சூரிய வெளிச்சம் கூட உள்ளே நுழைய முடியாமல் இயற்கை நமக்கு அமைத்து தந்துள்ள இதனுள் பயணிப்பதே ஒரு த்ரில் அனுபவம்.
எனவேதான் சாகச எண்ணங்கள் கொண்ட இளம் தலைமுறை இந்தக் குகையை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். இப்போது எப்படி மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு இந்த டூரிங் ஸ்பாட்டிற்கு ஒரு மவுசு வந்துள்ளது.

இதேபோல் பல ஆண்டுகள் முன்னால் வெளியான கமல்ஹாசனின் 'குணா' திரைப்படத்தால்தான் இந்தக் குகைக்கு இந்தப் பெயரே வைக்கப்பட்டது.
இந்தக் குகைகளின் அடிவாரத்தில் அமர்ந்துதான் கமல்ஹாசன், 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம்' என்ற பாடல்வரிகளை உச்சரிப்பார். அப்படியே பாறையைவிட்டு பாறைக்குத் தாவி, 'மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது' என்பார். அப்போது காடே அதிரும்.
மிகக்குறைவான இருட்டில், சின்ன மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அந்தக் காதல் ரசம் பொங்கும் பாடல் வெளியான பிறகு, பலரும் அந்தக் காலத்தில் இந்தக் குகையைத் தேடிச் செல்ல துவங்கினர்.

இப்போது மீண்டும் அந்தப் படையெடுப்பு தொடங்கியுள்ளது. வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது இந்தக் குகையை 1821இல் பிரிட்டிஷ் அதிகாரியான பி.எஸ்.வார்டு என்பவர்தான் கண்டுபிடித்தார் எனத் தகவல் தருகிறது விக்கிப்பீடியா.
அப்போது இதற்கு Devil's Kitchen (cave) or Devil's Kitchen Sinkhole என்று பெயர் இருந்துள்ளது. அதாவது சாத்தானின் சமையலறை. என்ன அழகான பெயர்? அதாவது சாத்தானே சமையல் செய்து சாப்பிடுவதற்கு ஒரு சமையலறையை வைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகள் முன்பே இந்தக் குகையில் குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின் உடலை மீட்கும் பணியைச் செய்து வந்த ஜோசப் என்பவர் அளித்திருந்த பேட்டி வைரலானது. இந்த வேலையை அவரது அப்பா செய்து வந்ததாகவும் அவருக்குப் பின் தான் செய்து வருவதாகவும் சொல்லி இருந்தார்.

இவருக்கு 60 வயது இருக்கும். அதற்கு முன் அப்பா என்றால் குறைந்தது 100ஆண்டுகளுக்கு மேலாக இதே குகையில் வேலை செய்து வந்துள்ளது இவரது குடும்பம்.
இந்தக் குணா குகை பற்றி ஜிகர்தண்டா ராம்ஸ் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவரும் அந்த மலையாளப் படத்தில் நடித்துள்ளார். "குணா குகையில் படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளை மட்டும்தான் இயக்குநர் நேரடியாக ஷூட் செய்தார்.
அதன்பிறகு கொச்சின் பக்கம் உள்ள ஆலுவா என்ற இடத்தில்தான் செட் போட்டு எடுத்தார். படத்தில் வரும் பாதி குகைகள் செட் போட்டு எடுத்ததுதான். ஆனால், படத்தில் செட் என்று தெரியாத மாதிரி அப்படியே அச்சு அசலாக செட் போட்ட பட்டது. அது எங்களுக்கே வியப்புதான். நடிக்கும் போதே எங்களுக்கு அது உண்மையான குகை என்ற உணர்வைத்தான் கொடுத்தது" என்று உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

ஊரே இந்தக் குகையை நோக்கு படையெடுத்துள்ள தருணத்தில், ஆலுவா செட் பற்றிய ரகசியம் கசிந்துள்ளது.
அந்தக் காலத்திலேயே இந்தக் குகை கமல் கண்களில் எப்படிச் சிக்கியது? "மனித நடமாட்டமே இல்லாத பிரதேசங்களில் எல்லாம் 'குணா' படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்புக்குச் சரியான இடத்தை தேடுவதற்காக நானும் சந்தான பாரதியும் 7 கி.மீட்டர் அலைந்தோம். அப்போதும் சரியான இடம் அமையவில்லை.
இன்னும் 1 கிமீட்டர் போய் பார்க்கலாம் என்று போனோம். அங்கே ஒரு அருமையான லொக்கேஷன் கிடைத்தது. 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கிப் போக வேண்டியிருந்தது" என்று மலரும் நினைவுகளை அசைபோட்டுள்ளார் கமல்.

1991இல் குணா திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்தக் குகை, மூன்று பாறைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரு பிளவு. இதற்குள்ளாகச் சின்னதும் பெரியதுமாக 20க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டி குகைகள் உள்ளன.
மக்களின் கண்களில் அதிகம் படாத இந்தப் பகுதிக்குள் நுழைந்தவர் கமல்ஹாசன்தான். இந்தப் படத்தின் திரைக்கதையை எல்லாம் ரெடி பண்ணி வைத்த பிறகு திடீர் என்று ஒரு நாள் சந்தான பாரதியை அழைத்து 'நீ இந்தப் படத்தை டைரக்ட் பண்ணு' என்றாராம் கமல். அது தனக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்கிறார் சந்தான பாரதி.
எப்படியோ ஒரு குணா அடுத்து 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஆகிய இரண்டு படங்கள் மூலம் சாத்தானின் சமையலறையின் சத்தம் அதிகம் கேட்கத் தொடங்கி உள்ளது.






-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications