Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசாங்க பெண் அதிகாரியின் படுக்கையறை பல்புக்குள் ஒளிந்திருந்த உண்மை! பாத்ரூம் பல்பை கழற்றியபோது பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே ஒளிந்திருக்கும் வஞ்சக முகத்தை அப்பட்டமாக தோல் உரித்து காட்டியிருக்கிறது. இப்படிக்கூட மனிதர்கள் இருப்பார்களா? என்ற கோப கேள்வியையும் எழுப்பி வருகிறது.. அப்படி என்ன நடந்தது? யாரிந்த பரிதாப பெண்?

கோகக் பகுதியை சேர்ந்தவர்கள் சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மாகநாதர் மற்றும் முகமது பாலேகுண்ட்ரி.. இவர்கள் 3 பேருமே ஒரு பெண் அரசு அதிகாரியிடம் அறிமுகமாகி உள்ளனர்..

Karnataka news

அரசு பெண் அதிகாரி

தங்களை பத்திரிகையாளர்கள் என்றும், யூடியூப் சேனல் நடத்துபவர்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு, அரசு பெண் அதிகாரியுடன் நட்பு பாராட்டியுள்ளனர். ஆனால், அந்த நட்பிற்கு பின்னால் இவ்வளவு பெரிய சதித்திட்டம் ஒளிந்திருக்கும் என்று அந்த பெண் அதிகாரி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்..

மீடியாவில் பணிபுரிபவர்கள் என்பதால் 3 பேரையுமே அந்த பெண் அதிகாரி அதிகமாக நம்பியிருக்கிறார்.. தங்களை அந்த பெண் அளவுக்கு அதிகமாக நம்புகிறார் என்பதை புரிந்து கொண்ட அந்த 3 பேரும், அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்த முடிவு செய்தனர்.. இதற்காக பெண்ணின் அன்றாட நகர்வுகளை மறைந்தபடி கண்காணித்து வந்துள்ளனர்.

ஒருநாள், அந்த பெண் அதிகாரி வீட்டில் இல்லாதபோது, நைஸாக வீட்டிற்குள்ளும் நுழைந்துவிட்டார்கள்.. யாருமே கற்பனை செய்தும் பார்க்க முடியாத கீழ்த்தரமான ஒரு காரியத்தை அப்போது செய்தனர்..

படுக்கையறை, பாத்ரூம் பல்ப்

அதாவது படுக்கையறை, பாத்ரூம் என வீட்டின் அறைகளில் இருந்த பல்ப்களுக்குள் ரகசிய கேமராக்களை பொருத்தி உள்ளனர்.. ஒவ்வொரு விளக்குக்கு உள்ளேயும் ரகசிய கேமராக்கள் இருப்பதை அறியாத அந்த பெண் அதிகாரி, வழக்கம்போல் இயல்பாக தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார்..

சில நாட்களுக்கு பிறகு, தாங்கள் பதிவு செய்த வீடியோக்களை அந்த பெண் அதிகாரியின் வாட்ஸ் அப் நம்பருக்கு 3 பேரும் அனுப்பி வைத்தனர்.. ஆனால், அடையாளம் தெரியாத நபர்களை போல, மர்மமான குரலில் அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர்.

"இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவக்கூடாது என்றால் ஒரு கோடி ரூபாய் தர வேண்டும்" என்றும் பேரம் பேசியுள்ளனர்... ஒரு அரசு அதிகாரியாக சமூகத்தில் மதிப்பிற்குரிய நிலையில், இப்படியொரு வீடியோவையும், மிரட்டலையும் அப்பெண் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

50 லட்சம் ரூபாய் பேரம்

1 கோடி ரூபாய் இல்லாவிட்டால் 50 லட்சம் ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என்று அந்த கும்பல் கட்டாயப்படுத்தியது.. இறுதியில் போலீசுக்கு செல்வது என அந்த பெண் முடிவெடுத்தார்.. மாலமாருதி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, சிபிஐ பி.ஆர். கடேகர் தலைமையிலான சிறப்புப் படை களத்தில் இறங்கியது.

தொழில்நுட்ப ரீதியாகவும், ரகசியமாகவும் போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த அதிகாரிக்கு நெருக்கமானவர்களே இப்படியொரு துரோகத்தை செய்தது அம்பலமானது... எனினும் அவசரப்பட்டு அந்த கும்பலை போலீஸார் பிடிக்கவில்லை.. அவர்களை வலையில் விழவைக்க முடிவு செய்தனர்..

இதற்காக பணம் தருவதாக சொல்லி, பெண் அதிகாரி மூலம் அந்த கும்பலை வரவழைத்தனர்.. 50 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 3 பேரும் வந்ததுமே, அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மெமரி கார்டுகள்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 மெமரி கார்டுகள், பென் டிரைவ், ரகசிய கேமரா ஹோல்டர்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் உலவும் இதுபோன்ற கிரிமினல்கள், இன்னும் எத்தனை பெண்களை இதுபோல வேட்டையாடி இருப்பார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போது போலீஸார் இந்த கும்பலின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+