நெடுஞ்சாலைகளா? நகரச் சாலைகளா? டெல்லி பிளானை கையில் எடுத்த ஸ்டாலின்.. தரமான 'செக்' மேட்!
சென்னை: தமிழ்நாட்டின் உள்ளே பயன்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளின் விதிகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் சில பரிந்துரைகளை பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பீக் ஹவர்ஸில் அண்ணா சாலையிலோ அல்லது கோயம்பேடு ரவுண்டானாவிலோ சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி வாகன ஓட்டியிடம் கேட்டால் தெரியும், நரகத்தை விடக் கொடுமையானது நகர்ப்புற டிராஃபிக் என்று! இந்தத் தலைவலியைத் தீர்க்க 'தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம்' (MoRTH) ஒரு புதிய வரைவுத் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

ஆனால், "திட்டம் ஓகே... ஆனா காசு?" எனத் தமிழக அரசு யோசிக்கத் தொடங்கியிருப்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்!
தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சக திட்டம் - நகருக்குள் எதற்கு ஹைவே?
மத்திய அரசின் திட்டம் சிம்பிள். நகரத்தின் இதயப் பகுதிக்குள் புகுந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை, 'ஸ்டேட் ரோடுகளாக' மாற்றி மாநில அரசிடம் ஒப்படைப்பதுதான் இதன் முதல் படி. அதற்குப் பதிலாக, நகருக்கு வெளியே 'ரிங் ரோடுகள்', பைபாஸ்கள் மற்றும் மேம்பாலங்களை அமைத்து, ஊருக்குள் வரும் லோக்கல் டிராஃபிக்கையும் நெடுந்தூரப் பயணிகளையும் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது டெல்லி.
இதற்காக ஐந்து விதமான நிதி மாடல்களை மத்திய அரசு முன்வைத்திருக்கிறது. அதில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?
50-50 டீல்: சாத்தியமா?
மத்திய அரசு முன்வைக்கும் முதல் மாடல் '50:50 காஸ்ட் ஷேரிங்'. அதாவது, திட்டச் செலவில் பாதியை மாநில அரசு ஏற்றால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு டோல் வசூலில் பாதியைத் தமிழகம் எடுத்துக்கொள்ளலாம். கேட்பதற்கு 'லெவல்' ஆகத் தெரிந்தாலும், தமிழக அதிகாரிகளோ "நிர்வாக ரீதியாக இது எளிதுதான், ஆனால் நிதி ரீதியாக இது மிகப்பெரிய சுமை (Fiscally Demanding)" என நழுவுகிறார்கள்.
அடுத்ததாக, நிலம் கையகப்படுத்தும் செலவில் 30 முதல் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்பது. தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் ஏற்கனவே செட்டில் ஆகிவிட்டதால், இது ஓரளவு ஒர்க்-அவுட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'புதிராக' இருக்கும் மற்ற மாடல்கள்!
ஜி.எஸ்.டி மற்றும் கனிம வள ராயல்டி தொகையைத் திரும்பப் பெறுவது, நில மதிப்பைப் பிரிப்பது (Value Capture Finance - VCF) போன்ற மற்ற மாடல்களைத் தமிழகம் ஏனோ ஏறிட்டும் பார்க்கவில்லை. குறிப்பாக, VCF போன்ற முறைகளுக்கு இங்கே இன்னும் சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இது குறித்துப் பேசிய வல்லுனர்கள் "1920-களிலேயே மெட்ராஸ் டவுன் பிளானிங் சட்டத்தின் கீழ் இதுபோன்ற வரிகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், அதில் உருப்படியான வருவாய் எதுவும் வரவில்லை" என ஃப்ளாஷ்பேக் கொடுக்கின்றனர்.
டிராஃபிக் குறைய வேண்டும்
புதிய ரோடு வேண்டும், டிராஃபிக் குறைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நிதிச் சுமையைத் தமிழக அரசு முழுமையாக ஏற்கத் தயங்குவதால், இந்த 'மெகா' திட்டங்கள் வேகம் எடுக்குமா அல்லது ஃபைல்களுக்குள்ளேயே தூங்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
வழக்கமான ஃபண்டிங் முறையையே நம்பியிருந்தால், நகர்ப்புற நெரிசல் குறைய இன்னும் பல ஆண்டுகள் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருக்கும் போல!












Click it and Unblock the Notifications