வாழ்க்கையை புரட்டி போட்ட ஐபிஎல்.. பாதை காட்டிய பதான்.. பறக்க வைத்த கோலி-உச்சம் தொட்ட காஷ்மீர் வீரர்
சென்னை: இந்திய டி 20 உலகில் புதிய சூப்பர் ஸ்டராக உருவெடுத்து இருக்கிறார் உம்ரான் மாலிக். ஹைதராபாத் அணியில் ஆடிய இவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார்.
ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக சொதப்பி வெளியேறி உள்ளது. இருந்தாலும் ஹைதராபாத் அணி மிக முக்கியமான பவுலர் ஒருவரை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வீரர் உம்ரான் மாலிக்.
இந்திய அணிக்கு ஹைதராபாத் அணி மூலம்தான் நடராஜன் உள்ளே வந்தார். ஐபிஎல்லில் இவரின் பவுலிங் காரணமாக இந்த அணியில் நெட் பவுலராக வந்து அதன்பின் ஆஸ்திரேலிய தொடரிலும் கலக்கினார். இப்போது அதே ஹைதராபாத் அணிதான் மாலிக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

மாலிக்
உம்ரான் மாலிக் கிட்டத்தட்ட நடராஜன் போன்ற பின்னணியை கொண்டவர்தான். நடராஜன் தென் கோடியில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றால் மாலிக் வடக்கின் உச்சத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். பெரிதாக கிரிக்கெட் வீரர்கள் தேசிய அணியில் ஆடாத, ஆனால் பல திறமையான வீரர்களை கொண்ட காஷ்மீரை சேர்ந்தவர்தான் உம்ரான் மாலிக். பெரிய அளவில் முதல் தர போட்டிகளில் ஆடாமலே தனது திறமை மூலம் ஐபிஎல் போட்டிகளில் உச்சம் தொட்டார்.

பவுலிங்
பாஸ்ட் பவுலரான இவர் சொந்த ஜம்மு காஷ்மீர் அணியிலேயே இடம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். ஒரு சில டி 20 போட்டிகளை மட்டுமே முதல் தர அணியில் ஆடி இருக்கிறார். ஆனால் அதிலும் கூட போட்டிக்கு 2 விக்கெட் என்று எடுத்து இவர் கவனம் ஈர்த்தார். இந்திய முன்னாள் பாஸ்ட் பவுலர் இர்பான் பதான் காஷ்மீர் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

வாழ்க்கை
அவர்களின் வாழ்க்கை தரத்தை கிரிக்கெட் மாற்றும் என்று இர்பான் நம்புகிறார். இதனால் காஷ்மீர் இளைஞர்கள் பலருக்கு பதான் நேரடியாக உதவி செய்து வருகிறார். அப்படித்தான் உம்ரான் மாலிக்கின் திறமையை கண்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்கி பதான் மெருகேற்றி இருக்கிறார். வாழ்க்கையில் பெரிய பிரேக்கிற்காக காத்து இருந்தவர் இர்பான் பதானின் பரிந்துரை காரணமாக ஹைதராபாத் அணிக்குள்ளும் வந்தார்.

2019
2019ல் இருந்தே உம்ரான் மாலிக் குறித்து இர்பான் பதான் தொடர்ந்து பல இடங்களில் பேசி வந்தார். உம்ரான் மாலிக்கை அடையாளம் கண்டு ஹைதராபாத் அணிக்கு பரிந்துரை செய்தார். நடராஜனுக்கு மாற்று வீரராக வந்த உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். பெங்களூர் அணிக்கு எதிராக இவர் பவுலிங் தாண்டவம் ஆடினார். இவரின் ஒவ்வொரு பந்தும் மிக எளிதாக 150 கிமீ வேகம் கடந்ததை பார்த்து மைதானமே திகைத்து நின்றது. லேசாக வாசிம் அக்ரம் ஆக்சன்.. கொஞ்சம் உமேஷ் யாதவ் ஆக்சன் என்று கலந்து கட்டி வர போட்ட பவுலிங் மொத்த மைதானத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

வயது
இத்தனையையும் இவர் வெறும் 21 வயதில் செய்து இருக்கிறார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார். பொதுவாக ஷார்ட் பந்துகளை இவ்வளவு வேகத்தில் வீச முடியாது. ஆனால் உம்ரான் அதையும் கூட 153 கிமீ வேகத்தில் வீசினார். இதனால்தான் ஆட்டத்திற்கு பின் கோலி கூட இவரை பாராட்டி இருந்தார். உம்ரான் மாலிக் போன்ற திறமையான வீரர்களை கண்டுபிடிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மகிழ்ச்சி
இர்பான் பதான் உம்ரான் மாலிக்கிற்கு பாதை காட்டினார் என்றால் கோலி இப்போது உம்ரான் மாலிக்கை பறக்க வைத்துள்ளார். ஆம், இவரின் சிறப்பான பவுலிங் காரணமாக தற்போது நெட் பவுலராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோலி பாராட்டி ஒரே வாரத்தில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியின் நெட் பவுலர் இவர்தான். இந்திய அணி பெரிதாக பாஸ்ட் பவுலர்களை இந்த முறை அமீரகம் கொண்டு செல்லவில்லை. இதன் காரணமாக நடராஜன் பாணியில் உம்ரான் மாலிக் இந்திய அணிக்குள்ளே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வறுமை
உம்ரான் மாலிக் மிகவும் வறுமையான பின்னணியை சேர்ந்தவர். இவரின் அப்பா காய்கறி கடை வைத்து உள்ளார். கொரோனா லாக்டவுன், அதற்கு முன் காஷ்மீர் லாக் டவுன் காரணமாக இரண்டரை வருடம் பயிற்சியே எடுக்காமல் இருந்தும் கூட இப்படி உம்ரான் மாலிக் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். இந்த ஒரே ஒரு சீசன் உம்ரான் மாலிக் வாழ்க்கையை மாற்றி உள்ளது. வயதும் 21தான் ஆவதால் இந்தியாவின் மிகப்பெரிய பாஸ்ட் பவுலராக உருவெடுக்கும் அனைத்தும் வாய்ப்புகளும் உம்ரான் மாலிக்கிற்கு உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications