சிபிஐயின் நேர்மை சுக்குநூறாக உடைந்துவிட்டது.. கலங்கும் முன்னாள் சிபிஐ இயக்குனர்.. குற்றச்சாட்டு!

சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Alo verma press meet | அலோக் வெர்மாவின் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

    சென்னை: சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார்.

    சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தனது நீக்கம் குறித்தும், தனக்கு எதிராக அளிக்கப்பட்டு இருக்கும் புகார்கள் குறித்தும் தற்போது முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா பேட்டியளித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக அவர் புகார்களை அடுக்கியுள்ளார்.

    சிபிஐ அமைப்பு

    சிபிஐ அமைப்பு

    அவர் தனது பேட்டியில், சிபிஐ அமைப்பு என்பது முக்கியமான வழக்குகளை, ஊழல்களை, குற்றங்களை விசாரிக்க கூடிய அமைப்பு. இது சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதன் தனித்துவம் காக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாம் மாறிவிட்டது.

    வெளிப்புற தொல்லைகள்

    வெளிப்புற தொல்லைகள்

    வெளிப்புற தொல்லைகள் இல்லாமல் சிபிஐ செயல்பட அவேண்டம். நான் இந்த சிபிஐ அமைப்பின் பன்முகத்தன்மையை, ஒருமைப்பாட்டை காக்க அதிகமாக போராடினேன். ஆனால் நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதோ இப்போது சிபிஐ அமைப்பின் நேர்மை சுக்குநூறாக உடைந்துவிட்டது.

    நீக்கி இருக்கிறார்கள்

    நீக்கி இருக்கிறார்கள்

    எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணையும் இல்லாமல் என்னை நீக்கி இருக்கிறார்கள். தவறான, பொய்யான தகவல்களை நம்பி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சிபிஐ அமைப்பிற்கே பெரிய இழுக்கை கொண்டு சேர்க்கும்.

    நேர்மை மட்டுமே

    நேர்மை மட்டுமே

    நான் இதுவரை நேர்மையாக அரசுக்கு வேலை பார்த்து இருக்கிறேன். ஒரே ஒரு நபர், காழ்ப்புணர்ச்சியை கொடுத்த புகாரால் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை காப்பது மட்டுமே என் வேலை. நான் அதை சிறப்பாக செய்து இருக்கிறேன் என்று அலோக் வெர்மா கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+